உதயநிதி அழுத்தத்தால் தான் ஹெலிகாப்டர் மீட்பு பணி நடந்ததா? தேசிய பேரிடர் குழு மீட்பு பணியில் இறங்கியதா? என்ன பேசுறீங்க !!! “மக்களுக்கு தேவையனாதை செய்துக் கொடுக்க மத்திய அரசு தயார்” – – –
- வானதி சீனிவாசன்
கோவை நெசவாளர் காலனி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து இறகுப்பந்து மைதானத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தி.மு.க அரசினை கடுமையாக சாடினார்.
மேலும் அவர் பேசுகையில் கார்பன் சமநிலை இலக்காக வைத்து உலக நாடுகள் செயல்பட்டு வருகிறது. அதில் இந்தியாவும் கொள்கையுடன் திட்டங்களை எடுத்து வருகின்றனர். இந்தியாவிலே முதல் எம்எல்ஏ அலுவலகம் கார்பன் சமநிலை அலுவலகமாக மாற்றுவது எங்கள் இலக்கு.
தூத்துக்குடி வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக நிதி அளிப்பு குறித்து சொல்லியுள்ளார். மத்திய அரசு மீது பழி போடுவதிலேயே மாநில அரசின் செயல்பாடு உள்ளது. தேசிய பேரிடர் குழு களத்தில் பணி செய்யும் போது, முதல்வர் டெல்லியில் கூட்டணிக் கூட்டத்தில் இருக்கிறார்.
பண அரசியல் பேசுவதை விட்டுவிட்டு மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும். அமைச்சர் உதயநிதி பேச்சை கவனித்து வருகிறோம். மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களிடம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
நீங்கள் இணக்கமாக செயல்பட்டு மக்கள் கஷ்டங்களை தீர்க்க போகிறீர்களா. இல்லை உங்கள் ஈகோ பிரச்னையில் மக்களை துயரப்படுத்த போகிறீர்களா. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். பிரதமரை சந்திக்க முதல்வர் செல்லவில்லை.
கூட்டணி கூட்டத்திற்கு சென்றவர் பிரதமரை சந்தித்துள்ளார். திமுக தலைவர்கள் வட மாநில தொழிலாளர்களை தரக்குறைவாக பேசுவது முதல்முறை இல்லை. தொடர்ச்சியாக பேசுவதும் மன்னிப்பு கேட்பதுமாக உள்ளது.
உதயநிதி அழுத்தம் காரணமாக தான் ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்களா? அவர்கள் சொல்லி தான் பேரிடர் மீட்புக்குழுவினர் வந்தார்களா? வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.” என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















