தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 1 – 1 என்று சமன் செய்துள்ளது. இது வரலாற்று சாதனை ஆகும். இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்பதால், அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் களம்கண்டது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இளம் படையுடன் தான் இந்த டெஸ்ட் போட்டியை எதிர் கொண்டது
முதல் டெஸ்ட் போட்டியில்தென்னாப்பிரிக்கா அணி, இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி,ஒட்டுமொத்தமாக 4 புள்ளிகளை இழந்து WTC புள்ளிப்பட்டியலில் 38.89 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் 6-வது இடத்திலிருந்த பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறியது.
இரண்டாவது டெஸ்டில்வெற்றி பெற்றே ஆக வேண்டும் என முடிவு செய்து இறங்கியது இந்திய அணி கண்டிப்பாக பழி தீர்க்க வேண்டும் என காலம் கண்டது. முதலில் பந்து வீசிய இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியை அபாரமான பந்துவீச்சின் மூலம் நிலை குலைய செய்தது.ம
தொடங்கப்பட்ட இரண்டாவது போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் . 9 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ், தென்னாப்பிரிக்காவை 55 ரன்னில் சுருட்டி எறிந்தார்.
முதல் இன்னிங்ஸில் சிராஜ் 6 விக்கெட் என்றால், இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கிய பும்ரா அவருடைய 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கு வழி அமைத்தார் . இரண்டு இந்திய பவுலர்கள் ஒன்றாக 6 விக்கெட்டுகள் எடுப்பது இதுவே இரண்டாவது முறை. இதற்கு முன் புவனேஷ்குமார், இஷாந்த் சர்மா கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது பும்ரா மற்றும் சிராஜ் அசத்தியுள்ளனர்.
இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களின் மேஜிக்கால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியை வெற்றிபெற்ற இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்திய அணி சமன்செய்திருக்கும் நிலையில், தோனிக்கு பிறகு தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும் 2வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் சர்மா.
முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு 6வது இடத்திற்கு சென்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றியை பெற்று அசத்தியது54.16 புள்ளிகளுடன் 6வது இடத்திலிருந்து முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. தொடரை சமன் செய்தது, 2 போட்டிகளில் வெற்றிபெற்றது என இந்திய அணி சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அடுத்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி.