பழனி கோவிலில் நாதஸ்வரம், தவில் வாசிக்க தடை…புதிய விதியை அமல்படுத்திய திராவிட மாடல் அரசு.. பக்தர்கள் வேதனை…
திமுக அரசு வந்த பிறகு இந்து அறநிலைய துறை செயல்பாடாத துறையாகவும், இந்து மக்களுக்கே எதிரானதாகவும் உள்ளது என மக்கள் குமுறி வருகிறார்கள். மற்ற மதங்களின் கோயில்கள், மடங்களில் தலையிடாத மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோயில்களில் மட்டும் தலையிட்டு பல்வேறு விதிகளை விதிக்கிறது என்ற குற்றசாட்டு உள்ளது.
இந்த நிலையில் பழனி கோயிலுக்கு நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை விதிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் பக்தர்கள் வாக்குவாதம் ஏற்பட்டது இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் பழனி தைப்பூச திருவிழா வருகின்ற 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 25 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு நாதஸ்வரம், மேளங்கள் வாசித்தபடி கிரிவலப் பாதையில் வந்து படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் முயன்ற போது கோயில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பழனி கோவிலில் பணிபுரியும் நாதஸ்வர, தவில் ஊழியர்களை தவிர வேறு நபர்கள் நாதஸ்வரம், மேளம் அடித்து மலைக்கோவிலுக்கு வர அனுமதி இல்லை என்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் தடுத்து நிறுத்தி உள்ளனர் .
பக்தர்கள் 48 வருடமாக வந்து கொண்டிருக்கும் எங்களுக்கு புதிதாக நாதஸ்வரம் மேளம் அடிப்பதற்கு அனுமதி இல்லை கூறுவது என்று சரியானது அல்ல என்று அரசாணை காண்பிக்க சொல்லி பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில், மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஆண்டு தோறும் மேளதாளங்கள் முழுங்க மலைக்கோவிலுக்கு சென்று வரும் நிலையில் திடீரென நாதஸ்வரம், மேளம் வாசிக்க தடைவிதித்துள்ள சம்பவம் தங்களுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றும், உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் மேளதாளங்கள் வாசிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பறை இசைக்கக் கூடாது என்றும் நாதஸ்வரம், மேளம் மட்டும் அடித்துச் செல்லலாம் என இதற்கு முன்னாள் இருந்த இணை ஆணையர் நடராஜன் உத்தரவிட்டிருந்தார். தற்போது பறை இசைப்பதற்கும் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிக்க தடை விதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட மாடல் அரசு புது விதியை அமல்படுத்தி இருந்தாலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையில் எவ்வாறு நிர்வாகத்தால் நாதஸ்வரம் தவில் ஏற்பாடு செய்து தரமுடியும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















