தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் நிறைவு பெற்றது.
தற்போது இந்த யாத்திரை டெல்டா மாவட்டங்களில் நிறைவு பெற்றது . இந்த பயணத்தின்போது செல்போன் மூலம் மிஸ்ட் கால் கொடுத்து பாஜகவில் இணைவது, கூடாரங்கள் அமைத்து நேரடியாக உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட பல வழிகளில் உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உதாரணம் கடந்த 27 ஆம் தேதி நாகை மாவட்டத்தில் நடைப்பயணத்தின் போது பா.ஜ.க உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த .காவல் துறை உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டதாக விடியோக்கள் சமூக ஊடகங்களில் தீயாக பரவியது.
இதனால் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் சீருடையில் இருந்தவாறு பாஜகவில் இணைந்ததால் இருவரும் நாகை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு இருந்தனர்.இந்நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின்பேரில் ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இது திமுகவின் கொடூர முகத்தை காட்டியுள்ளது
இதற்கு பதிலடி தரும் வகையில் சேலத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் போது தமிழகம் முழுவதும் உள்ள ‘பாரத் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் சங்கத்தை சார்ந்த 100 க்கும் மேற்பட்டோர் தங்களை அண்ணாமலை முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லால் தமிழகம் முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற காவலர்கள் குடும்பங்களை நேரடியாக சென்று பாஜக குறித்தும் பாரத பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சி குறித்தும் பிரச்சாரம் மேற் கொண்டு பாஜகவில் இணைய கோரிக்கை வைக்க உள்ளார்கள்.
இந்த அதிரடி முடிவு சிறு சிறு துளியாக ஆரம்பித்தாலும் மாபெரும் புயலை கிளப்பும் என உளவு துறை அதிகாரிகள் திமுகவுக்கு தகவல் அனுப்பி உள்ளதாம்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது ;
சேலம் மாநகரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ‘பாரத் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் சங்கம்’ சார்பில், நூற்றுக்கும் அதிகமான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் திரு மோகன் அவர்கள் தலைமையில், பா.ஜ.க தமிழ் நாடு மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் திரு ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
காவல்துறையில் கடமை தவறாது பணி புரிந்து, சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காப்பாற்றிய, பெருமரியாதைக்குரிய தமிழக காவல்துறை அதிகாரிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அவர்கள் வருகை, தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் பாஜகவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்பது உறுதி. என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவு தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















