வழக்கத்திற்கு மாறான விடுமுறையை தேடுகிறீர்களா? சாகச விரும்பிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் புகலிடமான லட்சத்தீவுகளுக்கு செல்லுங்கள்.
பிரதமர் மோடி எதை செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் மோடி உலகத்தை சுற்றினார்
உலகம் தற்போது இந்தியாவை சுற்ற ஆரம்பித்து விட்டது ஆம் பிரதமர் மோடி லட்சத்தீவில் சென்று அதன் அழகை உலகிக்ரு காட்டினார். உலகம் இப்பொழுது லட்ச தீவு எங்கு உள்ளது என தேடிக்கொண்டு இருக்கிறது.
உலகம் தேடிய லட்சத்தீவுகள்-அரபிக்கடலில் ஒரு புள்ளியாக உள்ள லட்சத்தீவுகள் நேற்று மோடியினால் உலகம் முழுவது ம் கோடிக்கணக்கான மக்களால் கவனிக்கப்பட்டதால் வருகின்ற காலங்களில் மிக சிறந்த சுற்றுலா மையமாக உருவெடுக்கும்.
மோடி லட்சதீவில் நடத்திய கடல் சாகசம் இனி வருகின்ற காலங்களில் அதற்கு சுமார் 750 கிலோ மீட்டர்கள் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத் தீவுகளை மக்களின் மனதில் இருந்து மறைய வைத்து லட்சத் தீவுகளை நோக்கி பயணிக்க வைக்கும் ஒரே ஒரு வீடியோவினால் இந் தியாவின் லட்சத்தீவுகளை உல கம் முழுவதும் கொண்டு சென் று மக்களின் தேடலாகவும் இந்தியாவின் எதிரியாக இப்பொழுது செயல்படும் மாலத்தீவுகளுக்கு மூடலாகவும் இருக்க வழி ஏற்படுத்தி விட்டார் மோடி. https://x.com/narendramodi/status/1742831494861922444?s=20
மோடி லட்சதீவுகளில் கால் வைத்த பிறகு மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்ல வரிசையில் நின்ற சுமார் 2300 இந்தியர்கள் அவர்களின் ப்ளைட் டிக்கெட்களை கேன்சல் செய்து இருக்கிறார்கள்.இந்த 2300 இந்தியர்களும் மால த்தீவுகளின் பல்வேறு இடங்களி்ல் தங்குவதற்கு ஹோட்டல்களில் புக்கிங் செய்து இருந்த ரூம்
கள் கேன்சல் செய்யப்பட்டு இருக்கிறது.
மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்கள் தான் மிக அதிகமாக இருக்கிறாகள் இந்தியர்கள் மாலத்தீவுகளை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டதால் இனி மாலத்தீவுகள் சீனாவிடம் கடன் வாங்கி தான்காலம் தள்ள வேண்டிய நிலைமை உருவாகும்.
என்ன ஒரு பெரிய மூவ்.. இது சீனாவின் கைப்பாவையாக இருக்கும் மாலத்தீவுக்கான பெரிய பின்னடைவு. அதோடு லட்சத்தீவின் சுற்றுலா மேம்பாட்டுக்கு இது பெரிய பூஸ்ட்டாக அமையும்”
பிரதமர் தனது லட்சத்தீவு பயணத்தின் போது ஸ்நோர்கெலிங் சென்றார். ஸ்நோர்கெல்லிங் என்பது வாயில் ஒரு குழாயை வைத்து சுவாசித்து கொண்டு கடலில் நீந்தும் ஒரு முறையாகும். மேலும், அழகிய கடற்கரை மணலில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஓய்வாக அமர்ந்திருந்தார்.
இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அந்த படங்கள் வைரலாகின. இதனால் லட்சத்தீவு குறித்த தகவல்களை கூகுளில் ஏராளமானோர் சேகரித்து வருகின்றனர். வரும் காலங்களில் லட்சத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.