2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் களம் தற்போதே சூடு பிடித்துள்ளது. பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து இண்டி கூட்டணியை அமைத்துள்ளது. ஆலோசனை கூட்டங்களை மட்டுமே நடத்தி வர்ம இந்த கூட்டணி கரை சேருமா என காங்கிரஸ் கட்சி மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறது !!!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் 3 வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசே அமையும் என கூறியுள்ளது . பாஜக தனி பெருபான்மையுடன் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்து வருவதனால் பாஜக தனது வேட்பாளர்களை 3 மாதத்திற்கு முன்பாகவே அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் தான் ராகுலின் நடைபயணம் எதற்காக என்று பார்த்தால் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும் மாநிலங்களில், காங்கிரஸ் வெற்றி பெறவே வாய்ப்பு இல்லை என்ற நிலவரம் தான் நிலவுகிறது.
மாநில கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களில் எப்படியாவது சில பல சீட் தேற்றி கொள்ளலாம் என்று பார்த்தால், அங்கே நுழைய கூட இடமில்லை என்ற அளவுக்கு, ஒரே ஒரு சீட் தருகிறோம், மிஞ்சிப் போனால் இரண்டு சீட்டு தருகிறோம் என்று பேரம் பேசுகிறார்கள்
இது என்னடா 60 ஆண்டு காலம் ஆண்ட கட்சிக்கு வந்த சோதனை என்று கலங்கி போய் இருக்கிறார்கள் அதனால் மீண்டும் ஒரு பாதையாத்திரை போனால் தான் சரி வரும் என்று ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்
ஏதோ நியாயம் கேட்க போவதாக சொல்லி யாத்திரைக்கு பாரத் நியாய யாத்திரை என்று பெயர் வைத்தார் !!
அதற்குப் பிறகு என்ன குழப்பி விட்டார்களோ தெரியவில்லை, பாரத் ஜோடோ நியாய யாத்ரா என்று பெயர் வைக்கிறார் !!அதாவது குஜராத்தில் இருந்து அசாம் வரை, மேற்கில் இருந்து கிழக்கு வரை ஒரு யாத்திரை போகப் போகிறார் !!
இங்கே போய் என்ன நியாயம் கேட்க போகிறார் என்று தெரியவில்லை !! மேற்கு வங்கத்தை பொறுத்தவரை பல ஆண்டுகளாக அட்லீஸ்ட் எதிர்க்கட்சி அந்தஸ்தில் வைத்திருந்தீர்கள்…. இப்போது பூஜ்ஜியம் ஆக்கிவிட்டீர்களே என்று நியாயம் கேட்க போகிறாரா ?? இல்லை குஜராத்தில் மனசாட்சியே இல்லாமல் இந்த அளவுக்கு காங்கிரஸை வெறுத்து ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே என்று நியாயம் கேட்க போகிறாரா ??
இல்லை பீகார் மக்களிடம், லாலு பிரசாத்துக்கு எல்லாம் ஓட்டு போட தயாராக இருந்தீர்கள்…. காங்கிரஸ் ஏன் ஓட்டு போட மாட்டேன் என்கிறீர்கள் என்று நியாயம் கேட்க போகிறாரா ??
நியாமாக பார்த்தால், அறுபது ஆண்டுகாலம் ஏன் எங்களை புறக்கணித்து இருந்தீர்கள் என்று வடகிழக்கு மக்கள் தான் இவர்களிடம் நியாயம் கேட்க வேண்டும் !!சரி ஆனது ஆச்சு !! முதல் தடவை யாத்திரை போன போது, கோவா காங்கிரஸ் கூண்டோடு தாவியது !! இப்பொழுது எந்தெந்த மாநில காங்கிரஸ் களையுமோ என காங்கிரஸ் புலம்பி வருகிறது.