அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம், 19ம் தேதி, சி.ஐ.டி.யு., – ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 26 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் அதில் அடங்கும்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு பேச்சுவார்த்தையில் இறங்கியது. அடுத்தடுத்து நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், அறிவித்தபடி ஜனவரி 9ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வர இருப்பதால், பண்டிகைக்கு பிறகு கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை ஏற்க மறுத்து தங்களின் முடிவில் உறுதியாக உள்ளனர்.இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அரசின் பதிலில் திருப்தி அளிக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்கத்தினர், அரசின் பதிலில் திருப்தி அளிக்காததால், திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் தொடங்கும் என்றும், பேருந்துகளின் இயக்கம் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்படும் என்று அறிவித்தனர்.
இதனிடையே, தொ.மு.ச. உள்ளிட்ட சங்களில் உள்ள தொழிலாளர்களின் உதவியுடன் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை,பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் தமிழக மக்களை அதிக அளவில் பாதிக்கும்.
பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை பல லட்சம் ஆகும். தனியார் பேருந்து கட்டணமும் பிளைட் கட்டணம் அளவிற்கு உயர்த்தியுள்ளது அதற்கு அரசும் ஆதரவு தந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.