தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக, கடந்த இரண்டு நாட்களில் ரூ.6.6 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக, அதன் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதானி குழுமம் ரூ.42,768 கோடி முதலீடு செய்யவுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிமெண்ட் உற்பத்தி என பல துறைகளில் செய்யும் முதலீடுகள் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் 10,300 பேருக்கு அதானி குழுமம் நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது.ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் முதலீடுகளில் அதானி பங்கெடுத்திருப்பதை விமர்சிக்கும் விதமாக, திமுகவும், காங்கிரசும் அதானியையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்ற வரை இந்த விவகாரம் எதிரொலித்தது. குறிப்பாக, திருச்சி விமான நிலைய விரிவாக்கம் கூட அதானிக்காகத் தான் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. மேலும், அதானி மீது முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக அமைச்சர்களே ஊழல் குற்றம்சாட்டி வந்தனர்.அதானி குறித்து திமுகவினர் பேசிய பேச்சுகள் கீழே பட்டியிலடப்பட்டுள்ளது
இந்தியாவில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் நன்றாக வாழ்கிறது, அதுதான் அதானிகள்” உதயநிதி ஸ்டாலின், டிசம்பர் 2, 2023 அன்று உதகையில்பேசினார்.
அதானி ஊழலால் இந்தியாவே தலை குனிந்து நிற்கிறது” – 12/06/2023 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்.அதானி குழுமம் மீது வலுவான வாதங்களை முன் வையுங்கள்” – 29, ஜனவரி,2023 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பாஜக அரசின் மீதான நேரடிக் குற்றச்சாட்டுக்கள்” – 14, பிப்ரவரி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தி மு க ஆட்சிக்கு வந்தால் அதானி துறைமுக விரிவாக்கத்தை ரத்து செய்வோம்”- மார்ச் 13,2021 அன்று தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின்.
மோடி அதானிக்காக வேலை செய்யும் போது திமுக தமிழகம் முழுவதற்கும் வேலை செய்கிறது” :-உதயநிதி ஸ்டாலின்.
கமுதி பகுதியில் விவசாயிகளை மிரட்டி விளை நிலங்களை அபகரிக்கும் அதானி குழுமத்தினரை தடுத்து நிறுத்துவோம்” :- 30,அக்டோபர் 2017 அன்று தி.மு.க. தலைவர், மு.க.ஸ்டாலின்.
அதானி நிறுவனத்துடன் இணைந்து அ தி மு க அரசு ரூபாய்.23000 கோடி கொள்ளை” :- 7, மே, 2016 அன்று தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின். அதானிக்காக தமிழக நலன் தாரை வார்ப்பு” :- 13, ஜனவரி அன்று தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின்.
என்று அதானி குறித்து திமுகவினர் பேசிய பேச்சுக்களை பட்டியலிட்டுள்ளார் தமிழக பாஜகவின் நாராயண திருப்பதி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















