Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கூட்டணி உறுதியானது… திமுகவுக்கு எதிராக தேமுதிக போராட்டம்… பிரேமலதா விஜயகாந்த் எடுத்த புது அவதாரம்…

Oredesam by Oredesam
January 12, 2024
in செய்திகள்
0
தேமுதிக போராட்டம்... பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக போராட்டம்... பிரேமலதா விஜயகாந்த்

FacebookTwitterWhatsappTelegram

வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவ உள்ளது. திமுக,பாஜக,அதிமுக என மும்முனை போட்டி உருவாகியுள்ளது. திமுக தரப்பில் பெரிய கூட்டணி இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட் ஒதுக்கப்படும் என தகவல்கள் உருவாகி உள்ளது.

மேலும் தி.மு.க விலிருந்து பல கட்சிகள் வெளியேற வாய்ப்புகளும் அதிமாக காணப்படுகிறது. அதற்கு உதாரணம் தி.மு.க விற்கு பக்கபலமாக இருந்த எஸ்.டி.பி.ஐ கட்சி அ.தி.மு.க பக்கம் சாய்ந்துள்ளது.இதே போல் பல கட்சிகள் அதிமுக அல்லது பாஜக கூட்டணிக்கு தாவும் சூழ்நிலை உள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தமிழகம் முழுவதும் மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளார்கள்.எப்படி மக்களை சரிகட்ட போகிறோம் என்ற முனைப்பில் கூட்டணி அமைக்க முடிவு செய்து ஆலோசனையில் உள்ளது முக்கிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கவும் சிறு கட்சிகளை கழட்டி விடவும் முடிவு செய்திருந்த நிலையில் திமுக அரசை எதிர்த்து தேமுதிக போராட்டம் அறிவித்துள்ளது..இது ஆளும் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கடந்த மாதம் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினார்கள்.இது தமிழக அரசியலில் சிறு திருப்பமாக அமைந்துள்ளது. தற்போது எழுந்த கேள்வி விஜயகாந்த் மறைவின் அனுதாப ஓட்டுகள் எந்த கட்சிக்கு போகும் என்பதாகும். மேலும் பொன்முடி போன்ற அமைச்சர்கள் இல்லாத நிலையில் வட தமிழகத்தில் திமுக பலம் குறைந்துள்ளது. இதனால் தேமுதிக பாமக ஆதரவு கண்டிப்பாக வேண்டும் என சீனியர்கள் கூறி வருகிறார்கள்.

இதன் காரணமாக தேமுதிகவை எப்படியும் திமுக பக்கம் இழுத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உண்ணாவிரதபோராட்டம் அறிவித்துள்ளார். மேலும் அதிமுக தரப்பிலும் தேமுதிகவுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தைக்கு தூது விடப்பட்டது. ஆனால் அதற்கு சரிவர பதில் இல்லை என கூறுகிறார்கள்.

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சில நாட்களுக்கு முன் தமிழகத்திற்கு இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தி சென்றுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.இந்த நிலையில் தான் விஜயகாந்த் செய்த மக்கள் நலப் பணிகளை மறைக்கும் முயற்சியில் திமுகவினரும், அரசு அதிகாரிகளும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி தேமுதிக உண்ணாவிரத அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி மிகவும் வருத்தப்பட்டு மிகப்பெரிய கட்டுரையை எழுதினார். பல மத்திய அமைச்சர்கள் தங்களின் இரங்கலை பதிவு செய்தார்கள். இது தேமுதிகவினருக்கு பாஜக மீது ஒரு பற்று ஏற்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து 15 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையிலும், கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலும் முதல் போராட்டமே ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக அறிவித்துள்ளது அரசியல் களத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரேமலதா இன்று (ஜனவரி 11) விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”விஜயகாந்த் 2011ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மக்களின் ஏகோபித்த ஆதரவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக வளர்ச்சியடையாத அந்த ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களின் தேவைகள் அறிந்து மக்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கினார். சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், அங்கான்வாடி கட்டிடங்கள், நியாயவிலை கடைகள் என அடுக்கடுக்காக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.

அனைத்திற்கும் மகுடம் சூட்டுவதுபோல் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்த மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை அகற்றி, உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்ற அந்த பிரதான கோரிக்கையை எந்த அரசும் செய்யாத நிலையில், அந்த பாலத்தை அமைத்து தரவேண்டும் என்று முழுமூச்சுடன் டெல்லிவரை சென்று பிரதமரை சந்தித்து மத்திய நிதியாக ரூபாய் 22 கோடியை பெற்று வந்து அந்த உயர்மட்ட பாலத்தை அமைத்தார் விஜயகாந்த்.

திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் வரை செல்லுகின்ற பழைய தஞ்சாவூரான் சாலை என புகழ்பெற்ற அந்த சாலையில் மழை மற்றும் வெள்ள காலங்களில் மக்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தே தடைபட்டு போகும் அவலநிலை இருந்தது. அந்த அவலநிலையை போக்கியவர் விஜயகாந்த் என்பதை கள்ளக்குறிச்சி மாவட்டமே அறியும்.

அதேபோன்று ரிஷிவந்தியம் தொகுதியில் முக்கியமான பேருந்து நிறுத்தங்களில் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்துகளில் ஏற நிற்பதற்கு இடமில்லை என விஜயகாந்திடம் மக்கள் கேட்ட காரணத்தினால், பல பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடைகளை அமைத்தார். அப்படி அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகளில் மணலூர்பேட்டை மற்றும் மாடாம்பூண்டி கூட்டு ரோடும் அடங்கும்.

சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் காரணமாக, மாடாம்பூண்டி கூட்ரோட்டில் ரௌண்டானா அமைக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கிருந்த நிழற்குடையை அகற்ற முற்பட்டபோது, தேமுதிகவினரும், பொதுமக்களும் அதைத் தடுத்தனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுத்தவர்களிடம் மீண்டும் அருகாமையில் நிழற்குடையை கண்டிப்பாக அமைத்து தருகிறோம் என உறுதியளித்தனர். ஆனால் இன்றுவரை அதை அமைத்துதரவில்லை.

இந்தநிலையில் மணலூர்பேட்டையில் விஜயகாந்த் அமைத்திருந்த பயணியர் நிழற்குடையையும் கால்வாய் கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதை எடுக்க முற்பட்டபோது, தேமுதிகவினரும், பொதுமக்களும் திரண்டு அதை தடுத்து நிறுத்தினர். அப்போதும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கீழே கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேலே கான்கிரிட் போட்டு மூடிவிட்டு அதேஇடத்தில் மீண்டும் பயணியர் நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிச்சயமாக அமைத்துதருகிறோம் என உறுதியளித்தனர்.

கால்வாய் வேலை முடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் திமுகவினரின் தூண்டுதலால் இதுவரை அந்த நிழற்குடையை அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதை கண்டித்து கடந்த டிசம்பர் மாதம் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அப்போது காவல்துறையினர் தலையிட்டு தேமுதிகவினரிடம் பேசி கண்டிப்பாக அங்கே நிழற்குடை அமைக்க அதிகாரிகளிடம் பேசுகிறோம் என காவல்துறையினர் சமாதனம் செய்தனர். ஆனாலும் இன்றுவரை பயனியர் நிழற்குடை அமைக்க எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை.

இதை பார்க்கின்ற பொழுது தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது செய்த வியக்கத்தக்க மக்கள் பணிகளை மக்களிடம் இருந்து மறைக்கும் விதமாக, அவருடைய அந்த பணிகளை அழிக்கும் விதமாக அங்கு இருக்கின்ற திமுகவினரின் தூண்டுதலால் அரசு அதிகாரிகள் செயல்படுவதாக மக்களே குற்றம்சாட்டுகிறார்கள்.

முதலில் மாடாம்பூண்டி கூட்ரோடு அடுத்தது மணலூர்பேட்டை என விஜயகாந்திடம் அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் அங்குள்ள திமுகவினரையும், அவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளையும் வன்மையாக கண்டிக்கின்றேன். மேலும் இதை கண்டித்து வரும் ஜனவரி 20 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரேமலதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கப்பலோட்டிய தமிழன் வ.‬உ.சி பிறந்த தினம்! கப்பல் வைத்திருந்தவர் இறுதியில் கடன்காரராக இறந்த வ.உ.சி !

கப்பலோட்டிய தமிழன் வ.‬உ.சி பிறந்த தினம்! கப்பல் வைத்திருந்தவர் இறுதியில் கடன்காரராக இறந்த வ.உ.சி !

September 5, 2020
இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

August 18, 2021
தொழிலாளர் விரோத திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள்! ராமதாஸ் அறிக்கை.

தொழிலாளர் விரோத திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள்! ராமதாஸ் அறிக்கை.

November 10, 2024
lal salam.

லால் சலாமை காப்பாற்றுங்கள் மக்களே.. ரஜினியை பங்கம் பண்ண ப்ளூ சட்டை மாறன்…

February 8, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x