அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் செவ்வாய்கிழமை ராமர் விக்ரஹத்தின் பிராணப்பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லக்னோவில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தைத் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டார். அதேபோல், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்ற ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இணைந்து கோயிலில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டார்.
தற்போது கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் திருக்கோவிலுக்கு சென்ற பாஜக எம்.ல்.ஏ வானதி சீனிவாசன் ஆலயத்தினில் தூய்மை பணியினை மேற்கொண்டார் அதைத்தொடர்ந்து, அவர் சுவாமி தரிசனமும் செய்து வழிபட்டார்.இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியா முழுவதும் முக்கிய பிரமுகர்கள் கோவில்களை தூய்மை படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்கள்.