கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 முதல் 2016 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் தேமுதிகவின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் இருந்து வந்தார்.அப்பொழுது 2013- 14ஆம் நிதி ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் மணலூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோவில் எதிர் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
இந்நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, மத்திய அரசிடம் இணைக்கமாக இருந்ததனால் அங்கு நிதி பெற்று இருபது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணலூர்பேட்டை பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை தியாகதுருகம் இடையே உயர் மட்ட பாலம் கட்டினார்.
இதனை தொடர்ந்து அப்பகுதி வேகமாக வளச்சியடைய ஆரம்பித்து.மேலும் நிழ்ற்க்கூடைய சுற்றி பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்கள் அமைய தொடங்கின.
இந்நிலையில் சாலை விரிவாக்க பணி என்று காரணம் காட்டியும், கழிவுநீர் கால்வாய் கட்டுவதாகும் கூறி விஜயகாந்த் கட்டிய நிழற் குடையை அகற்றினார்கள். மறைந்த விஜயகாந்த் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நிழற்குடை அகற்றப்பட்டது என தேமுதிக குற்றம் சாட்டியது. மேலும் நிழற்குடை அகதறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கால்வாய் பணி முடிந்ததும் அந்த கேப்டன் விஜயகாந்த் கட்டிய நிழற்குடை மீண்டும் அங்கேயே அமைக்கப்படும் என தேமுதிகவினரிடம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டி இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் நிழற்குடை அமைக்காமல் உள்ளதை கண்டித்து தேமுதிக சார்பில் வருகின்ற 20ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.