வீட்டு வேலைக்கு வந்த பட்டியல் சமூக பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏ.கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை காவல்துறையினர் ஆந்திராவில் கைது செய்தனர்.
பட்டியல் சமூகத்தின், உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என மேடைதோறும் தி.மு.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ஆனால் திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்றதிலிருந்து பட்டியல் சமூகத்தினர் மீது நடக்கும் தாக்குதல்கள் அதிகமாகி உள்ளது.
திமுக அமைச்சர்களும் பட்டியல் சமூகத்தினரை மதிப்பதில்லை. ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சென்று சந்தித்த போது பிளாஸ்டிக் நாற்காலி தான் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
அதே போல் வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது..இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை, முக்கிய அரசியல் நிகழ்ச்சிகளில் , பட்டியல் சமூகத்தை சேர்ந்த பேரூராட்சி தலைவரையே அனுமதிப்பதில்லை இப்படி இந்த இரண்டு வருடங்களில் பட்டியல் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட சமூக ரீதியான தாக்குதல்களை கூறி கொண்டே போகலாம்
இந்த நிலையில் ஒருபடி மேல் சென்று சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண்ணை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் செய்தி மிகப்பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்த கொடுமை சம்பவத்திற்கு முதலில் குரல் கொடுத்தவர் பாஜக தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை அவர்கள் உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்தினார்.
மேலும் இது குறித்து பா.ஜ.க மகளிர் அணி தலைவர் வானதி அவர்களும் பட்டியல் சமூக பெண்ணுக்கு வன்கொடுமை: செய்த தி.மு.க எம்.எல்.ஏ மகன் மருமகள் கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து பாஜகவிற்கு அழுத்தம் கொடுத்தனர். வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க தவறிய நேரத்தில் பா.ஜ.க பட்டியல்சமூக பெண்ணிற்காக குரல் கொடுத்தார்கள்.
அதனை தொடர்ந்தே அதன் அடிப்படையில், ஆன்ட்ரோ மற்றும் மார்லினா மீது, பெண்கள் மற்றும் எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் சிக்கிய இருவரும், வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக இருந்தனர்.அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆன்ட்ரோ, மார்லினாவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.