தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடிகலந்துரையாடினர். இதற்கான ஏற்பாட்டினை பாஜக இளைஞரணி மேற்கொண்டது. இந்த நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட முதல் முறை வாக்காளர்கள் பங்குபெற்றுள்ளார்கள்.
நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் பகுதிகளிலிருந்து முதல் முறை வாக்காளர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் சுமார் 2300 க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை வாக்காளர்கள் பங்கு பெற்று தமிழகத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் தங்களது முதல் வாக்கினை பிரதமர் மோடிக்கு தான் என்று பதிவும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுகளை மாவட்ட தலைவர். அஸ்வின் குமார்,மாநில இளைஞரணி துணை தலைவர் R.ஜீவா மாவட்ட இளைஞரணி தலைவர் டில்லி பாபு மற்றும் இந்த நிகச்சிக்கான சட்டமன்ற சட்டமன்ற வாரியான இளைஞரணி பொறுப்பாளர்களான….
ஆவடி சட்டமன்றம்:பொறுப்பர்கள் தினேஷ் கார்த்திக் இணை பொறுப்பாளர்கள் மோகன் மற்றும் குமர கணேஷ் பூந்தமல்லி சட்டமன்றம்: பொறுப்பாளர்- புருஷோத்தமன் இணை பொறுப்பாளர்கள் சாலி தினகரன் மற்றும் பார்த்திபன் திருவள்ளூர் சட்டமன்றம்: பொறுப்பாளர் – பிரபாகர் இணை பொறுப்பாளர்கள் மேகவர்ணன் மற்றும் நவீன் குமார் திருத்தணி சட்டமன்றம்: (பொறுப்பாளர்) இணை பொறுப்பாளர்கள் பெருமாள் மற்றும் நேதாஜி ஆகியோர் ஏற்படுகளை செய்தனர்