நாடளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பலம் பொருந்த பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் 28 கட்சிகள் இணைந்து இந்தி கூட்டணியை உருவாக்கினார்கள். இண்டி கூட்டணி ஆனால் 4 முதல் 5 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை காபி பஜ்ஜி சாப்பிடத்தான் சென்றிருப்பார்கள் போல. யார் பிரதமர் வேட்பாளர் தொகுதி பங்கீடு என குழப்பத்தில் தான் முடிந்தது ஆலோசனை கூட்டம்.
தேர்தல் நெருங்க நெருங்க இண்டி கூட்டணி உடைந்தது. இண்டி கூட்டணியில் இடம்பெற்ற மம்தா மேற்கு வங்கத்தில் தனித்து போட்டி,ஆம் ஆத்மீ தனித்து போட்டி இண்டி கூட்டணியை உருவாக்க நினைத்த நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோர்க்கலாம் என செய்திகள் இப்படி இண்டி கூட்டணி ஒன்றுமில்லாமல் போனது.
இந்த நிலையில் இண்டி கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பீகார் சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தது. இது பீகார் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. பீகாரின் கக்கன், காமராஜர் என போற்றப்படுகிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராக திகழ்ந்தவர் கர்பூரி தாக்கூர். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததால், பாஜகவையும் பிரதமர் மோடியையும் வானவளாவா புகழ்ந்து தள்ளினார் நிதிஷ்குமார்.
அத்துடன் நிற்காமல் போகிற போக்கில் வாரிசு அரசியலையும் வெளுவெளுவென வெளுத்துவிட்டார் நிதிஷ்குமார். முதலில் திமுகவை ஹிந்தி கற்க சொன்ன நிதிஷ் தற்போது வாரிசு அரசியலை வெளுத்து வாங்கியது காங்கிரஸ், லாலுபிரசாத், திமுகவை வெலவெலக்க செய்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க பீகாரில் காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய பாஜக முடிவெடுத்துவிட்டது போல பீகார் அரசியல் நெருக்கடி குறித்து இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 13க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பா.ஜ.கவுடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பா.ஜ.க உடன் தொடர்பில் இருப்பதாகப் பீகார் பா.ஜ.க வட்டாரங்கள் ஆங்கில ஊடகங்களிடம் கூறியுள்ளது.
பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து வெளியேறி ஜேடியுவின் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கை கோர்க்க உள்ளதாகத் தகவல் பரவும் நிலையில், இந்தத் தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பா.ஜ.க ஏற்கனவே இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயை பீகாருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரும் நாட்களில் பீகார் மாநிலத்தில் நடக்கும் சம்பவங்கள் அம்மாநில அரசியலை மட்டுமின்றி, தேசிய அரசியலையும் தீர்மானிக்கும்ராகுல் பீகாரில் யாத்திரை செல்லும் பொழுது காங்கிரஸ் கட்சி ஆபிஸ் மட்டும் தான் இருக்கும் என பீஹார் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.