மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலை தென்கயிலாயம் என்று போற்றப்படுகிறது. கோவையிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இருந்து 7 மலைகள் ஏறி அங்குள்ள சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். மேலை சிதம்பரம் என்ற திருப்பேரூருக்கு மூலத்தலமாக விளங்குவது தென்கயிலை மலையாகும். கடல் மட்டத்துக்கு மேல் 6 ஆயிரம் அடி உயரத்தில் கிரிமலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் பஞ்ச லிங்கேசுவரராக எழுந்தருளி உள்ளார்.
ஒரு ஆண்டில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையுள்ள 4 மாதங்களான கோடைக்காலத்தில் மட்டுமே பக்தர்கள் இங்கு மலையேற அனுமதிக்கப்படுவது வழக்கம். அதுபோல் பிப்ரவரி மாதம் தொடங்கியும் இன்னும் வெள்ளியங்கிரி மலை திறக்கப்படவில்லை.மலையேறி ஈசனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடேன திரும்பி செல்லும் நிலையில் உள்ளார்கள்
இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் இங்ரஹ அறநிலைய அமைச்சர் சேகர்பாபு விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது
கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி. இம்மலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளை தாண்டி சிவபெருமானை தரிசித்து வருகினறனர்.
தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் ஆனால், தற்பொழுது பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை மலை எற அனுமதிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை சார்பில் அளித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.