உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் முகமது சமி நமாஸ் செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் ராமர் கோவில் கட்டப்பட்டு வந்ததால் ஆமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் பலரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறி கோஷம் எழுப்பினர்.இந்த சம்பவமும் சர்ச்சையை கிளப்பியது

இந்த சர்ச்சைகளுக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார் பதிலளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி.
அவர் கூறியிருப்பதாவது : ஜெய் ஸ்ரீ ராம், அல்லாஹு அக்பர் என்று கோஷமிடுவதால் எந்த தவறும் கிடையாது என்று ‘ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கிறது? ஆயிரம் முறை கூட ஜெய் ஸ்ரீராம் சொல்லலாம்” என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் நான் ஒரு முஸ்லீம், இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். நான் ஒரு பெருமைமிக்க இந்தியன். என்னைப் பொறுத்தவரை, நாடுதான் முதலில். இந்த விஷயங்கள் யாரையாவது தொந்தரவு செய்தால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
எல்லா மதங்களிலும் மாற்று மதத்தினரை விரும்பாத சில பேர் இருப்பார்கள். ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கிறது? ஒருமுறை அல்ல, 1000 முறை கூட ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லலாம். நான் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டுமென்றால் 1,000 முறை சொல்வேன்; இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதில் என்ன தவறு இருக்கிறது? எனவே, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறி முற்றுப்புள்ளி வைத்துளளார்.

இதனை தொடர்ந்து தேசம் தான் முதல் மற்றவை அதற்கு அடுத்துதான் என கூறிய முகமது சமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















