விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ.க கட்சி தேர்தல் அலுவலகம் 10-02-24 நேற்று திறக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் திறக்கும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். உடன் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா :
“மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என யாராவது சொன்னால், அந்த அரசாங்கம் இந்திய சட்டப்படி நடத்தப்படவில்லை என பொருள்.இந்திய அரசியல் சட்டப்படி நடக்கவில்லை எனில் என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்பது ஸ்டாலினுக்கு தெரியும்.
ஏனெனில் 1976ல் அவரது அப்பா நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சீரியசாக ஏதும் செய்தால் மத்திய அரசின் நடவடிக்கைகளும் சீரியசாக இருக்கும்” என்றார்.
மேலும் அதிக இளம் விதவைகள் உருவாவதற்கு கனிமொழியும், தி.மு.க., அரசும் தான் காரணம்.
மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்க மறுக்கிறது என கூறுவது தவறு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய நிதி பங்கு 32 சதவீதமாக இருந்தது. மாநிலத்தின் நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே தெரிவித்தார்.
பிரதமராக மோடி வந்த உடனே மத்திய நிதி கமிஷன் பரிந்துரையை ஏற்று, 42 சதவீதமாக மாநிலங்களுக்கான நிதி பங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை சட்டமாக கொண்டு வந்த போது, தி.மு.க. – எம்.பி., சிவா பாராட்டியும் உள்ளார்.
சென்னையில் வெள்ள நீர் வடிகால் அமைப்பதற்கு 4,000 கோடி ரூபாய் செலவாகியது என தெரிவித்தனர். தற்போது அத்துறை அமைச்சர், 42 சதவீதம் மட்டுமே செலவாகி உள்ளதாக தெரிவிக்கிறார். அதில், மீதமுள்ள 58 சதவீத பணத்தை என்ன செய்தனர்?
தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிக வருவாய் வழங்குகின்றன. இந்த நிதியை மற்ற மாவட்டங்களுக்கு செலவழிக்கக் கூடாது என மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கூறினால் என்ன செய்வர்.
தமிழகத்தில் 2014 தேர்தலில், கழகங்களின் கூட்டணி இல்லாமல் 19.5 சதவீத ஓட்டுகளை பா.ஜ.க பெற்றது. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் டாஸ்மாக். தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மதுவை ஒழித்து விடுவோம் என தி.மு.க., – எம்.பி., கனிமொழி தெரிவித்தார். எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இன்னும் அதிக இளம் விதவைகள் உருவாவதற்கு கனிமொழியும், தி.மு.க., அரசும் தான் காரணம்.
குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என திமுக சொன்னால் திமுக அரசை கலைக்க மத்திய அரசிற்கு அதிகாரம் உண்டு என திமுக அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா