அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது (1999-2004) 01.10.2000ல் BSNL நிறுவனம் தோற்றுவிக்கப்
பட்டது. தற்போது BSNLக்கு வயது 23. தோன்றியது முதலே BSNL நிறுவனம் லாபம் ஈட்டி வந்தது. ஒரு நாளின் லாபம் 8 கோடி ரூபாய் என்ற நிலையில் இருந்த லாபம் தெடர்ந்து அதிகரித்தது.2004-05 நிதியாண்டில் BSNL ரூ 10,000 கோடி லாபம் ஈட்டியது.
2004ல் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 10,000 கோடி லாபம் என்பது இன்றைய மதிப்பில் குறைந்தது ரூ 30,000 கோடி இருக்கும்.இவ்வாறு தொடர்ந்து லாபம் ஈட்டிக்கொண்டே வந்த BSNL நிறுவனம் முதன் முதலாக புண்ணியவான் ஆ ராசா தொலைதொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் (மே 2007-நவம்பர் 2010) நஷ்டத்தைச் சந்தித்தது.
2009-10 நிதியாண்டில் BSNL ரூ 1800 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. BSNLன் வரலாற்றில் ஏற்பட்ட முதல்நஷ்டம் இது. இதை ஏற்படுத்தியவர் ஆ ராசா. இந்த நஷ்டத்திற்கு அவரே பொறுப்பு. இவருக்கு முன் ராம் விலாஸ் பாஸ்வான், பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன் ஆகியோர் தொலைதொடர்புத் துறையின் அமைச்சர்களாக இருந்தபோது BSNL நஷ்டம் அடையவில்லை. 2000-01முதல் இன்று வரையிலான BSNLன் லாப நஷ்ட விவரங்கள் பொதுவெளியில் கிடைக்கின்றன.யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆ ராசா ஏற்படுத்திய நஷ்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்தது. அவருக்குப் பின் கபில் சிபல்,ரவி சங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். BSNLன் நஷ்டத்தைக் குறைக்க முயன்றனர். அவர்களால் நஷ்டத்தைக் குறைக்க முடிந்ததே தவிர, நஷ்டத்தை அடியோடு
ஒழித்து விட்டு லாபத்தை உண்டாக்க முடியவில்லை.காரணம் ஆ ராசா ஏற்படுத்திய சேதாரம் அவ்வளவு தீவிரமானது.
பின்னர் ஜூலை 2021ல் அஷ்வினி வைஷ்ணவ் இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.தமது முன்னோர்களைத் தொடர்ந்து இவரும் BSNLன் நஷ்டத்தை ஒழித்து லாபத்தை ஏற்படுத்த முனைந்தார். அதில் அவர் தற்போது வெற்றி கண்டுள்ளார். ஆம் BSNL லாபம் ஈட்டத் தொடங்கி விட்டது.
நடப்பு நிதியாண்டில் BSNL நிறுவனம் ரூ 1500 கோடி லாபம் ஈட்டி உளளது. இத்தகவலை துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். Global Business Summit 2024 என்னும் வணிக உச்சி மாநாட்டில் பேசும்போது அமைச்சர் வைஷ்ணவ இதைத் தெரிவித்தார்.மேற்கூறிய ரூ 1500 கோடி லாபம் என்பது நிகர லாபம் அல்ல. வரி, தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளைக் கணக்கிட்டுக் கழித்த பிறகே நிகர லாபத்தைச் சொல்ல இயலும். .அதற்குச் சிறிது காலம் ஆகும்.
ஆக ஆ.ராசா 2009ல் ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து BSNLக்கு 2024ல் விடுதலை கிடைத்துள்ளது. ஆ ராசா ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னால் மீண்டெழுந்து முன்பு போல் லாபம் ஈட்டத் தொடங்கி விட்டது BSNL. பள்ளத்தில் விழுந்த யானை எழுந்து விட்டது. அது கம்பீரமாக நடக்கத் தொடங்கி விட்டது.f