யார் இந்த மனித நேயர் சைதை துரைசாமி :
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி இவர் மேயராக மட்டுமல்ல மனித நேயம் மனிதராகவும் இருந்து வருகிறார்.அப்பழுக்கற்ற அதிசய மனிதர் சைதை துரைசாமி தனக்காக மட்டும் சம்பாதிப்பவர்களுக்கு மத்தியில் தானம் செய்வதற்காக சம்பாதித்துக்கொண்டிருப்பவர் சைதை துரைசாமி. தனிப்பட்ட முறையில் பலருக்கும் உதவி செய்து வந்த இவர் 2005ம் ஆண்டு மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு டிரஸ்ட்டை உருவாக்கி தனது மனித நேய எல்லையை விரிவுபடுத்திக்கொண்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி பகுதியில் திருமண மண்டபம் ஒன்றை நிறுவி ஏழை எளியோர் இங்கு இலவசமாக திருமணம் நடத்திக்கொள்வதற்காக ஏற்பாடு செய்துள்ளார். இங்கு திருமணம் செய்பவர்களிடம் எந்த விதத்திலும் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிப்பதில்லை. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் அதிக அளவு தேர்வு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை இவரின் மனித நேய அறக்கட்டளை செய்து வருகிறது. இங்கு பயிற்சி பறும் கிராம பகுதி மாணவ, மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மனித நேய அரக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. தனிநபர் ஒருவர் இவ்வளவு பெரிய காரியத்தை செய்வது சைதை துரைசாமி ஒருவராகத்தான் இருக்கும்.
இது தவிர தமிழகம் முழுவதும் மருத்துவம், பொறியியல், மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் இவரது மனிதநேய அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும், ஏழை எளிய மக்கள் இவரை அணுகினால் கல்வி உதவித்தொகை, பள்ளி கட்டணத்தொகை மற்றும் பாடப்புத்தகங்கள் நோட்டுகள் வாங்குவதற்கும் உதவி செய்து வருகிறார்.
நீங்கள் ஏன் கல்வி நிறுவனம் நடத்தக்கூடாது? என்று கேட்டால் கல்வியை காசாக்குவது தவறு என்று நினைப்பவன் நான். கல்வி தானமாக வழங்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் சொந்தமாக கல்வி நிறுவனம் நடத்தினால், அது என் கொள்கைக்கு மாறாக நடக்கும் படி ஆகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே நான் அந்த காரியத்தில் ஈடுபடவில்லை என்கிறார் இந்த மக்கள் தொண்டர்.
உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் உதவ வேண்டும் என்பதற்காக அமரர் ஊர்தியும், இறந்தவர் உடலை பாதுகாக்கும் 10 ப்ரீசர் பெட்டிகளும், வாங்கி இலவசமாக அனுப்பி வைக்கிறார்.
பொதுத்தொண்டு செய்வதில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் உயர்ந்த மனிதர். தவறான பழக்க வழக்கம் இல்லாதவர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை உணவை மட்டுமே உண்டு வருபவர். ஆரோக்யத்திற்காக யார் எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு தோள் கொடுத்து உதவும் பண்பாளர். குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து மீண்டு வந்து ஓராண்டு மதுவை தொடாமலே இருந்தால் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டுவார்.
இவரின் ஒரே மகன் வெற்றி துரைசாமி ஐவரும் அதே குணங்களுடன் இருந்தவர். தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார். கடந்த 4 ஆம் தேதி மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, சட்லஜ் நதியில் விழுந்தது. இதில் கார் ஓட்டுநர தஞ்ஜின் இறந்தார்.
கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காணாமல் போன வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, கடந்த 9 நாட்களுக்கு பின்னர் வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எந்த துக்க நிகழ்விலும் கலந்து கொள்ளாத நடிகர் அஜித் குமார் தனது நண்பன் வெற்றி துரைசாமிக்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் திரை பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் பொதுமக்கள் அனைவரும் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
.வெற்றிதுரைசாமி உடல்தகனம் செய்யப்பட்ட பின் மனித நேயர் சைதை துரைசாமி அவர்கள் பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
“எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் மனம் கலங்க மாட்டேன். சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என இந்த நாளில் சூளுரை கொள்கிறேன் ஒரு மகன் போனாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர். இங்குள்ள அனைத்து சமூகத்தினரை சார்ந்தவர்களையும் அரசுப் பணியில் சேர்க்க வைக்க முயற்சிப்பேன். இதனை இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துக்கொள்கிறேன்” என மனித நேயத்தை பற்றி மட்டுமே பேசினார் மனிதநேய செம்மல் சைதை துரைசாமி…