இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குரூப் ChatGPT மற்றும் கூகுளின் GEMINI AI போன்ற AI மாடலுக்கு போட்டியாக ஹனுமான்(hanuman) என்ற AI மாடலை உருவாக்கி வருகிறது.
ஹனுமான், GPT-3.5 ன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய மொழி மாதிரி என்று தெரியவந்துள்ளது.
சாட் ஜிபிடி’, கூகுளின் ஜெமினி போன்றவற்றுக்கு போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. ஹனூமான் என்ற ‘ஏ.ஐ’ மாடலை மார்ச் மாதத்தில் வெளியிட உள்ளனர்.
பாரத் ஜிபிடி குழுமம் என்பது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆதரவுடன், இந்தியாவின் பல்வேறு ஐஐடி நிறுவனங்களின் பின்புலத்தில் இயங்குவது. ஏஐ புரட்சிக்கு ஈடுகொடுத்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு சாட்பாட் மற்றுன் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை வெளியிட பாரத் ஜிபிடி குழுமம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த தலைமுறையை ஆட்டிப்படைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதலில் ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாட்பாட் (chat bot) இதுவரையில் செயற்கை நுண்ணறிவு எட்டாத உயரத்துக்கு அதை கொண்டு சேர்த்தது என்றே சொல்ல வேண்டும். கணினி, அறிவியல், கணிதம், கலை சார்ந்த எந்த கேள்வியை கேட்டாலும், அதி நுணுக்கமான பதில்களை அதுகொடுக்கிறது.
அதேபோல், கூகுள் நிறுவனம் ஜெமினி என்ற பெயரிலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்ங் ஏஐ என்ற பெயரிலும் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் பாரத் ஜிபிடி குழுமத்தினர் மற்றும் 8 ஐஐடி நிறுவனங்களின் மென்பொருள் விற்பன்னர்கள் இணைந்து, இந்தியாவுக்கான சாட்ஜிபிடி மாதிரியாக ஒன்றை உருவாக்கி அதற்கு ஹனுமன் என பெயரிட்டுள்ளன.
நாட்டின் சுகாதாரம், நிர்வாகம், நிதிச் சேவைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் 11 உள்ளூர் மொழிகளில் இந்த சாட்பாட் செயல்பட உள்ளது. இவற்றுக்கு அப்பால் பயனர்களின் தேவைக்கேற்பவும் சேவையாற்ற ஹனுமன் காத்திருக்கிறார். இன்று சகல துறைகளும் செயற்கை நுண்ணறிவான ஏஐ வசம் மாறி வருகின்றன. அந்த வகையில் உருவான ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் ஜெமினி ஆகியவை பெரும் புரட்சிக்கு வித்திட்டிருக்கின்றன. அவற்றுடன் இணைந்து பயணிக்காது போனால் பின்தங்கிப் போவோம் என பல்வேறு துறையினரும் ஏஐ துறையில் பாய்ச்சல் காட்டி வருகின்றனர். இவ்வாறு முயற்சிக்கும் இந்தியர்களுக்கு ஹனுமான் உதவிக்கரம் நீட்ட இருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் ஜிபிடி (BharatGPT) என்னும் பெயரில் இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐஐடி பாம்பே உடன் கைக்கோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இதற்காக ‘ஹனூமான்’ என்ற மாடலை புகுத்தியுள்ளது. 11 இந்திய மொழிகள் அடங்கிய ஹனூமான் மாடலை மார்ச் மாதத்தில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.