மேட்டுப்பாளையம் அருகே நடந்த கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற தி.மு.க.எம்.பி ஆ.ராசா பேசும் போது, இந்த மாதிரி பொய் சொல்லும் முதல்வரை பார்த்ததில்லை என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து திமுகவின் மானத்தை இவரே கப்பலேற்றிவிடுவார் என திமுகவினர் பேச ஆரம்பித்துள்ளார்கள்.
மேலும் ஆ.ராசா மனதில் உள்ளது பேச்சில் வந்துவிட்டது தனது அமைச்சரவை சகாக்களின் வாய்சாகக்கூட இதை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பொதுமக்களின் குரலாகவும் வைத்துக்கொள்ளலாம் எனவும் உண்மை நிலவரம் இது தான். ரகசியமாக அவர்களுக்குள் பேசும் கருத்துக்கள், வாய்தவறி வெளியே வந்துவிடுகிறது.என அக்கூட்டத்தில் இருந்தவர்கள் பேசினார்கள்.
வ உ சிதம்பரனார் பிள்ளை குறித்து அவதூறு பேச்சு:
மேலும் ஆ. ராசா சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ உ சிதம்பரனார் பிள்ளையை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் நாமக்கல்லில் நடந்த அரசியல் கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சி. தனது மகனின் வேலைக்காக சிபாரிசு கடிதம் எழுதி பெரியாரிடம் கெஞ்சியதாக ஆ.ராசா பேசியது பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் ஒட்டு மொத்த பிள்ளைமார் சமுதாயத்தையே இழிவு படுத்தும் வகையில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஒருமையில் பேசியுள்ளார். வ.உ.சி.யை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம்.இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சி. தனது மகனின் வேலைக்காக சிபாரிசு கடிதம் எழுதி பெரியாரிடம் கெஞ்சியதாக ஆ.ராசா பரப்பியுள்ளார். இது சுமார் இரண்டரை கோடி பிள்ளைமார் சமுதாயத்தினருக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆ.ராசாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல் எந்த ஒரு சமுதாயத்தையும் குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் பேசுவதைத் தடுக்க, தங்கள் கட்சியினரை கண்டிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறோம்.
வருகிற 25ஆம் தேதிக்குள் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை ஆதரிக்க மாட்டோம். அதன் விளைவை தேர்தலில் சந்திப்பார்கள். ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் தேர்தல் பிரசாரம் செய்ய அந்தக் கட்சியினர் வரும் போது கருப்புக் கொடி காட்டுவோம். கடந்த முறை எங்களுக்கு எதிராக அ.தி.மு.க. கட்சி செயல்பட்டதால் ஆட்சியை இழந்தனர். ” என்றார் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















