அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது கடந்தாண்டு ஜூன் 13-ல் கைது செய்தது. பலமுறை ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.“செந்தில் பாலாஜி கைதாகி, கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கி வருகிறது.
மேலும் வழக்கின் விசாரணையை வேகப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை ச அண்மையில் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசித்து வரும் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. ம பெற்றோரிடம் விசாரணையும் மேற்கொண்டது. இந்த விசாரணையில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் குறித்து விசாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததற்கு காரணம் திமுக வழக்கறிஞர்கள் தான் என கூறுகிறது செந்தில் பாலாஜியின் ஆதரவு தரப்பு. நாங்களே வாதாடியிருந்தால் கூட ஜமீனை பெற்றிருப்போம் ஆனால் திமுக வழக்கறிஞர்கள் ஆரம்பத்திலிருந்தே பாலாஜி மீதான வழக்கை ஏகத்துக்கும் குழப்பி தவறான வழிகாட்டுதலால் இந்த நிலையில் உள்ளோம் என பொங்கிவருகிறார்கள். ஒரு தெளிவான வழிகாட்டுதலை அவர்கள் தரவேயில்லை. ‘
மேலும் முதலில் அவர்கள் கூறியது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால், அமலாக்கத்துறை பிடியிலிருந்து விடுபட முடியாது அதிகாரத்தில் இருந்தால், அதை வைத்து ஜாமீன் கோரலாம்’ என்றனர். அதன் பபின்னர் மருத்துவக் காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் கோருவதாக ரூட்டை மாற்றினர். அதை நம்பியிருந்தே பல மாதங்கள் உருண்டுவிட்டன. எந்த முன்னேற்றமும் இல்லை.
சில வாரங்களுக்கு முன்னர், ‘அமைச்சர் பதவியைக் கைவிட்டால்தான் ஜாமீன் பெற முடியும் என்றார்கள். அதற்கும் சம்மதித்து, பதவியை ராஜினாமா செய்தார் பாலாஜி. ஆனால், ‘பதவியை ராஜினாமா செய்து விட்டதையே ஜாமீனுக்கான அடிப்படையாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என நீதிமன்றத்தில் கட்டையைப்போட்டுவிட்டது அமலாக்கத்துறை. இதனால் மனம் நொந்து போயுள்ளாராம் செந்தில் பாலாஜி. திமுகவவிற்கு வந்து உடல்நிலையும் போச்சு அதிகாரமும் போச்சு பணமும் போச்சு எனசிறையில் பார்க்க வருபவர்களிடம் மற்றும் உறவினர்களிடம் புலம்ப ஆரம்பித்துள்ளாரம்.
ஒருபக்கம் அமலாக்கத்துறை வழக்கு சம்பந்தமாக 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதேசமயம், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திலும், அதே மோசடி குற்றச்சாட்டு தொடர்பான தனியொரு வழக்கு விசாரணையில் இருக்கிறது.
இதை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்துவரும் அந்த வழக்கில், கூடுதலாக 900 பேரைக் குற்றவாளிகளாக இணைத்திருக்கின்றனர். அவர்கள் மீதும் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கலாகியிருக்கிறது. இதை காரணமாக வைத்து அமலாக்கத்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டைபோடும் முயற்சியில் தீவிரமானது பாலாஜி தரப்பு. ஒரு வழக்கைக் காரணமாகக் காட்டி, மற்றொரு வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் யுக்தியைத்தான் பாலாஜி தரப்பினர் கையில் எடுத்திருக்கின்றனர்.
‘சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் இதே மோசடிக் குற்றச்சாட்டைத்தான் விசாரிக்கிறார்கள். அதில், 900 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்த்திருக்கின்றனர். அந்த விசாரணை முடிவடையும் வரையில், அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது’ எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கவில்லை
. உடனடியாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்கக் கோரினர். அதை ஏற்க உயர் நீதிமன்றமும் மறுத்துவிட்டது. ராஜதந்திரங்கள் கைகொடுக்காத நிலையில், திணறிப்போய்விட்டனர் பாலாஜி தரப்பினர்.
பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டால், ஜாமீன் கிடைப்பதென்பது சிக்கலாகிவிடும். . இதனால் ஒரு வழக்கின் சிக்கலிலிருந்து விடுபட மற்றொரு வழக்கு, அந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேறொரு வழக்கு என வலை பின்னிவருகிறது செந்தில் பாலாஜி தரப்பு. கடைசியில் அந்த வலையில் அவர்களே கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் திமுக தரப்பு தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஏனென்றால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், நீதிமன்றமும் அமலாக்கத்துறையும் எழுப்பும் பிரதான கேள்வி, “பாலாஜியின் தம்பி அசோக்குமார் எங்கே..?” என்பதுதான். அந்த அளவுக்குக் கடந்த 200 நாள்களுக்கும் ஓடி ஒளிந்துள்ளார் அசோக் குமார். செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கைப் பொறுத்தவரையில், அவரின் தம்பி அசோக் தான் மிக முக்கியமானவர். அவர் மூலமாகவே, பல பரிவர்த்தனைகளும் நடந்திருக்கின்றன.
அரசு அதிகாரிகள் செய்ய வேண்டியதை அவர்தான் தீர்மானித்திருக்கிறார். இன்று வரை செந்தில் பாலாஜியின் பண பரிவர்த்தனைகளைக் கையாள்வது அசோக்தான். அதற்கெனவே பல்வேறு ‘சிம்’ கார்டுகளை உபயோகிக்கிறார். மேலும் அமலாக்கத்துறை அசோக்கைக் கைதுசெய்ய நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் கேட்டுள்ளார்கள்.அப்படி பிடிவாரன்ட் கிடைத்துவிட்டால் அசோக்கை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நாள் வரை அசோக்குமாருக்கு க்கு உதவுபவர்கள் அனைவரும் வளைக்கப்படுவார்கள். அசோக் மூலமாக, 2021-க்குப் பிறகு நடந்திருக்கும் பரிவர்த்தனை விவரங்களும்சேகரித்துள்ளது அமலாக்கத்துறை. டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம், கரூரில் கிளை வைத்திருப்பதன் மர்மத்தையும்… திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு தி.மு.க பிரமுகர் மூலமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்ந்த பரிவர்த்தனைகளையும் அசோக்கிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
அசோக் சிக்கினால் பாலாஜிக்கு மொத்தமும் சிக்கலாகிவிடும். இந்த ஆண்டு முடிவதற்குள் பாலாஜி மீது வேறு சில வழக்குகள் பதிவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனால்தான், அசோக்கை வெளியிலேயே கொண்டு வராமல், தனக்கு ஜாமீன் பெறுவதில் முனைப்பாக இருக்கிறார் பாலாஜி.
அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி 15-ம் தேதி, பாலாஜி மீதான ஜாமீன் மனுவில், ‘குற்றத்தினால் ஈட்டிய வருமானம் 1.34 கோடி ரூபாய் அல்ல. 67.75 கோடி ரூபாய்க்கு மோசடி செய்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறோம். அதில், 30 கோடி ரூபாய் வெவ்வேறு இடங்களில் பதுக்கிவைக்கப் பட்டிருக்கிற’ எனப் புதிய வாதத்தை முன்வைத்தது அமலாக்கத்துறை.இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தன் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததற்குப் பல்வேறு காரணங்கள் அடுக்கப்பட்டாலும், ‘ஜாமீன் பெறுவதற்குத் தடையாக இருப்பதால்தான், பதவியை ராஜினாமா செய்தார்’ என்பதே பிரதானமாகக் கூறப்படுகிறது. ராஜினாமா முடிவை அவர் எடுத்த பிறகும், எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால், ரொம்பவே நொந்துபோயிருக்கிறாராம் பாலாஜி.
அரசியல் ரீதியாக, கொங்கு மண்டலத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார் செந்தில்பாலாஜி. கோவையில் தொடங்கி கரூர் வரையிலான ஒன்றியச் செயலாளர்கள் பலரது அலுவலகங்களிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக பாலாஜியின் புகைப்படமே இருக்கும். இன்று, அந்தப் படங்களெல்லாம் மாயமாகின்றன.
அவர் விரலசைவில் செயல்பட்ட பல கரூர் ஃபைனான்ஸியர்கள், இன்று ஜோதி மாவட்டப் புள்ளியிடம் சரண்டராகிவிட்டனர். கரூர் மாவட்டத்துக்குள்ளேயே பாலாஜிக்கு எதிரான நகர்வுகள் தான் அரங்கேறிவருகிறதாம் இதன்காரணமாக கொங்குப் பகுதி செந்தில் பாலாஜியின் கையைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது
சிறைவாசத்தில் பாலாஜி இருக்கும் இத்தனை நாள்களிலும், ஒரு முறைகூட கரூர் மாவட்ட நிர்வாகிகளோ, கட்சி சீனியர்களோ சிறைக்குச் சென்று பாலாஜியைப் பார்க்கவும் இல்லை; ஆறுதல் சொல்லவும் இல்லை. அதற்கு நேர்மாறாக, பாலாஜிக்கு எதிரான நகர்வுகளே கட்சிக்குள் அனலைக் கிளப்புகின்றன. செந்தில் பாலாஜி வெளியே வருவதைப் பெரும்பாலான சீனியர்களும், கொங்குப் பகுதி நிர்வாகிகளும் விரும்பவில்லை.
அவருடைய செல்வாக்கைக் கட்சிக்குள் திமுகவில் உடைப்பதற்கு உண்டான வேலையைத் தொடங்கிவிட்டனர். அதற்கு திமுக தலைமையும் கீரின் சிக்னல் காட்டிவிட்டது பாலாஜியை கழட்டிவிட்டது. தன் அரசியல் சாம்ராஜ்ஜியம் மொத்தமாக சுக்குநூறாகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துள்ளார் செந்தில்பாலாஜி .
இது செந்தில் பாலாஜிக்கு அதிமுக்கியமான ஒரு கட்டம் கைதாகி, நோயாளியாகி, சிறைவாசியாகி, முன்னாள் அமைச்சராகி, 200 நாள் சிறைவாசத்தைக் கடந்தும்கூட, இன்னும் ஜாமீன் என்பது கனவாகவே இருக்கிறது அவருக்கு. விடை தெரியாததால், விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் பாலாஜி. ஒருவேளை நீதிமன்றம் அவர் எதிர்பார்க்காத தீர்ப்பைத் தந்தால், பாலாஜியின் அரசியலும் முற்றுப்பெறலாம் இல்லை மாறுபடலாம் …
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















