நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் திர்ஹளுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஆளும் பாஜக தேர்தல் களத்தில் முன்னணியில் உள்ளது கிட்டத்தட்ட வேட்பாளர்கள் லிஸ்டையும் தயாரித்து விட்டதாம். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதால் மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் உற்சாகத்தில் உள்ளார்கள் பாஜக தொண்டர்கள். தேத்தல் வேலைகளையும் துரிதப்படுத்தியுள்ளார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை அண்ணாமலை ஏற்கனேவே பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் பிரதமரின் பத்தாண்டு சாதனைகளையும் திமுக அரசின் ஊழல்களையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறார். தமிழகத்திற்கு பிரதமர் மோடியும் தொடர்ந்து விஜயம் செய்வதால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் களத்தில் முன்னணியில் தான் உள்ளது.
என் மண் என் மக்கள் பயணத்தின் நிறைவு நாளான பிப்ரவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் பிரமாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார். இதற்காக 1000 ஏக்கரில் தயாராகி வருகிறது மாநாட்டிற்கான திடல்.பல்லடத்தில் மோடியை காண இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது.மாநாட்டு வேலைகளை அண்ணாமலை அவர்கள் நேரில் கண்டு துரிதப்படுத்தி கொண்டு வருகிறார். அண்ணாமலைக்கு இது தான் அக்னி பரீட்சை என்று கூற வேண்டும்.
இந்த மாநாட்டை இந்தியா முழுவதும் உள்ள மீடியாக்களுடன் சேர்ந்து மக்களும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்முதலில் இந்த மாநாடு 25ம் தேதி ஞாயிற்றுகிழமை இருந்தது. ஆனால் தற்பொழுது செவ்வாய் கிழமையில் மாநாடு நடைபெற இருக்கிறது. வேலைநாள் என்பதால்வேலைகளை விட்டு விட்டு அவ்வளவு தூரம் தொண்டர்கள் வர வேண்டும்.வர வைக்க வேண்டும். இந்த மாநாட்டை வெற்றிகரமாக அண்ணாமலை நடத்தி முடிக்கவேண்டும் மேலும் இதில் அண்ணாமலை வெற்றி பெறவேண்டும் என்ற பல சவால்கள் அண்ணாமலை முன் காத்திருக்கிறது. அதன் காரணமாகவே இந்த மாநாட்டிற்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிந்து கூட்டணி தலைவர்களும் இந்த மா நாட்டில் பங்கு பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி தேமுதிக கட்சிகள் அதிமுகவை விட பாஜகவுடன் கூட்டணி வைக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. டெல்லியில் ஆட்சியில் இருந்து கொண்டு தமிழகத்தில் ஒரு கூட்டணியை கூட உருவாக்காமல் இருப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் அண்ணாமலை தலைமையில் தான் வருகின்ற மக்களவை தேர்தலை பா.ஜ.க சந்திக்க இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பாஜகவின் போர்ப்படை தளபதியாக தேர்தல் போர்களத்திற்கு செல்லும் முன்பே போர் முரசு கொட்டும் அதுபோல் பாஜகவின் பலத்தை இந்த மாநாட்டில் காட்ட வேண்டும். மேலும் பாஜக கூட்டணி தலைவர்கள் இந்த மாநாட்டில் மேடையில் ஒருங்கிணைக்க வேண்டும். இந்த மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அண்ணாமலை அவர்களுடன் அமர்ந்து விட்டால் போதும் பா.ஜ.க அதிமுக வை இந்த தேர்தல் களத்தில்
ஆரம்பத்திலேயே ஓரம் கட்டி விடும்.
சில வருடங்களுக்கு முன் திராவிட கட்சிகளின் புரளிகளால் தமிழக பா.ஜ.கவை எதிரி போல் பார்க்க தொடங்கினார்கள். ஆனால் தற்போது அந்த புரளி எல்லாம் சுக்குநூறாகி தமிழக மக்கள் தற்போது பாஜக பக்கம் திருப்பியுள்ளார்கள்.அண்ணாமலைக்கு 27 ஆம் தேதி நடக்கும் மாநாட்டிலும் மக்களவை தேர்தல் அக்னி பரிட்சையிலும் வெல்வார்