திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற எண் மண் எண் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி களைந்துகொண்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது என்னவென்றால்.
பாரதப் பிரதமர்நரேந்திரமோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சி சாதனைகளை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் #EnMannEnMakkal பயணம், கடந்த 2023 ஜூலை 28 அன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில், நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா. அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, கடந்த 7 மாதங்களாக, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்து, இன்றைய தினம், திருப்பூர் மாவட்டத்தில் நிறைவு பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் ஒரு நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசியல் மாற்றம் அமைய வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பும், உற்சாகமிக்க வரவேற்பும்,தமிழக பாஜக சகோதர சகோதரிகளின் எழுச்சியும், நமது யாத்திரைக்கு திமுக அரசு விதித்த பல தடைகளைத் தவிடுபொடியாக்கி, இந்த நடைபயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக்கியிருக்கிறது.
இன்று பல்லடத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி.அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தது, தமிழக மக்கள் மீது நமது பிரதமர் அவர்கள் கொண்ட பேரன்பை வெளிக்காட்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊரில் இருந்தும், லட்சக்கணக்கில் திரண்டு வந்து, நமது பிரதமர் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்ற நம் தமிழக மக்களின் அன்பும் ஆதரவும், நமது பிரதமர் அவர்களின் பத்து ஆண்டு கால நல்லாட்சிக்குச் சான்றாக விளங்கியிருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி. அவர்களின் ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களை முன்னிறுத்தி நடந்து வரும் நல்லாட்சி மூலம், உலக அரங்கில் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கிறது. உலகப் பொருளாதாரத்தில், 11 ஆவது இடத்தில் இருந்து, 5 ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. நமது பிரதமர் அவர்களின் ஆசை, கனவு, விருப்பம் எல்லாமே, நமது நாடு அனைத்துத் துறைகளிலும் உலக அரங்கில் முதலிடம் வகிப்பதுதான். அனைவருக்குமான வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய நோக்கத்தில், நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, அனைவருக்குமான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர் அவர்கள்.
சுதந்திரம் கிடைத்துப் பல ஆண்டுகளாக பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட பட்டியல், பழங்குடி சமூக சகோதர சகோதரிகள், மகளிர், ஏழை எளிய மக்கள் அனைவரும் நமது பிரதமர் அவர்களின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில் உயர் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். சமூக நீதியை வெறும் பேச்சளவில் நிறுத்திக் கொள்ளாமல், முழுமையாகச் செயல்படுத்தி வருகிறார் நமது பிரதமர் அவர்கள். அது மட்டுமின்றி, நமது தமிழ்மொழியின் தொன்மையையும், செழுமையையும் உலக அரங்கில் பல நாடுகளுக்குக் கொண்டு சென்று பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இன்றைய நிறைவு விழாவில் பேசிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி. அவர்கள், கொங்கு பகுதி, இந்தியாவின் முக்கியமான தொழில் பகுதி என்றும், ஜவுளி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியில், கொங்கு பகுதியின் முக்கியத்துவம் குறித்தும், உலக அரங்கில் வேகமாக முன்னேறி வரும் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, கொங்கு பகுதியின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன என்றும் பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும், தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்றும், நாட்டின் வளர்ச்சியில், தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்றும், தான் மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது போல #EnMannEnMakkal பயணம், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கி, வரலாறு படைக்கும் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், வளர்ச்சிப் பாதையிலான, சாமானிய மக்களுக்கான, நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி. அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, அவர் மீது மிகுந்த பற்று கொண்ட தமிழக மக்கள், தங்கள் முழு அன்பையும் ஆதரவையும் வழங்குவார்கள் என்பது உறுதி.