வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பெரும்பாலும் ஏப்ரல் இறுதியிலும் -மே முதல்வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளுக்கும் தயாராகி வரும் நிலையில் பாஜக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது பா.ஜ.க.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேட்பாளர்களை பட்டியலை வெளியிட பா.ஜனதா தீர்மானத்தித்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது.
இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் தேவந்திர பட்நாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக் மாண்டவியா, புஷ்கர் தாமி, பிரமோத் சவாந்த், பூபேந்திர யாத், ஜோதிராதித்யா சிந்தியா, கேஷவ் மவுரியா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழு மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்,பாஜகவின் பலம் பொருந்திய தலைவர்களும் கட்சி பணியில் 25 வருடம் இருப்பவர்கள் மட்டுமே இந்த குழுவில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குழுவில் இருப்பவர்கள் ஆலோசனையின் அடிப்படடையில் தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இக்குழுவில் கொங்கு மண்ணை சேர்ந்த வானதி சீனிவாசனும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் சில பேரின் தூண்டுதலால் தமிழக பாஜக தலைவருக்கும் வானதி சீனிவாசன் அவர்களுக்கும் இடையே பிரச்சனை என சமூக வலைதளைங்களில் பரவி வருகிறது. மேலும் வானதி சீனிவாசன் அவர்களை குறித்து உண்மைக்கு மாறான செய்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வரும் சூழ்நிலையில் இதெற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் பாஜகவின் உயர் மட்ட குழுவில் வானதி சீனிவாசன் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது.
நேற்று டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டேன். இரவு 11.00 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற இக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் திரு. நட்டா உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.