உதயநிதி ஒருநாள் அண்ணாமலை இடம் சிக்கி சின்னாபின்னமாகி விடுவார் என்பது எல்லோரும் எதிப்பார்த்திருந்த வேளையில் அந்த சம்பவத்தை நேற்று செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினை விளாசி தள்ளி விட்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வ சாதாரணமாக உதயநிதியை டீல் செய்து உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். தூத்துக்குடியில் சுமார் 18 ஆயிரம் கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டதால் இனி திமுக காணாமல் போகும் என்றும் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அண்ணாமலைதான் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தமிழகப் பயணம் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்தார். இதை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை மோடியின் கால் நகத்தில் இருக்கும் தூசிக்கு கூட சமம் இல்லாதவர் உதயநிதி என்று விளாசி தள்ளினார். மேலும் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ” உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பற்றி பேசுவார், தேர்தல் வந்தால் வேண்டாம் என்பார். உதயநிதிக்கு வெறும் வாய்ச்சவடால்தான். உதயநிதியின் பேக்கிரவுண்ட் என்ன?
உதயநிதியின் பெயருக்கு பின்னால் உள்ள அவரது அப்பா பெயரையும் தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் அவரால் 2 ஓட்டு வாங்க முடியுமா? கருணாநிதி என்ற பெயரும் ஸ்டாலின் என்ற பெயரும் இல்லாவிட்டால் உதயநிதி யார்? அவங்க அப்பா சம்பாதித்த பணத்தில் படத்தில் நடித்த ஒரு Failed Actor. உதயநிதி யார்? தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் பயன்படுத்தி ஒரு எம்எல்ஏ. உதயநிதி யார்? தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் பயன்படுத்தி ஒரு அமைச்சர் அவ்வளவுதான்