மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஓரிரு நாளில் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 வாரமாக அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தி வந்த விஜயகாந்த் துவக்கிய தே.மு.தி.க., பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது. மேலும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இன்று அல்லது நாளை பா.ஜ.க நிர்வாகிகளை தேமுதிக சந்திக்கும் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது போல் மேலும் பல தமிழக அரசியல் கட்சிகள் பா.ஜ.க கூட்டணியில் இணைய விருப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத் குமார் இன்று சந்தித்துள்ளார்.பாஜக – சமக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் பாஜக குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. நேற்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம் பாஜக குழு பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சமத்துவ மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. பாஜக குழுவினருடான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார, தற்போது மரியாதை நிமித்தமாக பா.ஜ.க குழுவினரை சந்தித்துள்ளதாகவும், தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணியை பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள் அதன் காரணமாக , நேற்று அன்புமணி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பாஜக மேலிடத் தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் பாஜக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில் அதிமுக தோற்றுவிட்டது ஆரம்பம் முதலே அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை இணக்கமாகவே இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி உள்ளிட்டவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் வீட்டுக்குச் சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த கட்டமாக தேமுதிக பேச்சுவார்த்தை குழுவினர் அதிமுக அலுவலகத்திற்கு வந்து தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர்.
தேமுதிகவுக்கு 3 தொகுதிகளை வழங்க அதிமுக முன் வந்ததாகவும், ஆனால் தேமுதிக சார்பில் கூடுதல் இடங்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் கேட்டதாகவும் சொல்லப்பட்டது. என்றபோதும் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த பிரேமலதாவின் தம்பி சுதீஷ், அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. மாறாக அவர் டெல்லியில் பாஜக தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்
தற்போது அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடர தேமுதிக விரும்பவில்லை டெல்லி பாஜக தலைவர்களுடன் அவர்கள் பேசி வருவதாகவும், அதன் விளைவாக அக்கட்சியும் விரைவில் பாஜக கூட்டணியில் இணையும் ஆக, காட்சிகள் மாறி கட்சிகள் இடம் மாறுவதால் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வலுவடைந்து வருகிறது.மேலும் வரும் மார்ச் 15-ம் தேதி சேலத்துக்கு வரும் பிரதமர், அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கு முன்னர் தமிழகத்தில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதிசெய்து பிரதமர் மோடி வேட்பாளர்கள் அறிமுகம் செய்வார் என கூறப்படுகிறது.
.
பாஜக கூட்டணி.திமுகவிற்கு சாவல் விடும் கூட்டணியாக மாறியுள்ளது அதிமுகவோ வெறும் பேச்சு மட்டும் தான் நடக்கிறது வீச்சுஒன்றும் இல்லை இதே நிலை தொடர்ந்தால் அதிமுக அரசியல் அனாதை ஆகிவிடும் என புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் இரத்தத்தின் இரத்தங்கள். பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுடன் பேசி வருவதாக தகவல்களும் வெளியாகி உள்ளது 2024 ல் ஒரு மிகப்பெரும் அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.