மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி சில அரசியல் கட்சிகள் நகரத் தொடங்கியுள்ளன.
ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை இழுபறியாக நடந்த வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய பல கட்சிகள் யோசிக்கும் நிலையில்,
பாஜக கூட்டணியில்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ,டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கட்சி,ரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ,ஏசி. சண்முகத்தின் புதிய நீதி கட்சி, தேவநாதன் யாதவ் தேசிய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், திருமாறன் தலையிலான தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணி இருக்கும் நிலையில் பல்வேறு அமைப்புகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்,அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வந்த தமிழர் தேசம் கட்சி தற்பொழுது அந்த கூட்டணியில் இருந்து விலகி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவிற்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணியை வளு சேர்க்கும் விதமாக, பாமக, தேமுதிக கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார்.அதில் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் KK செல்வ குமார் , வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி தொடர, தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். அவருக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழகத்திலும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றம் உருவாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஒருங்கிணைந்து செயல்பட அண்ணன் திரு KK செல்வ குமார் அவர்கள் உறுதி மேற்கொண்டுள்ளார்கள். தமிழர் தேசம் கட்சியின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், நிறைவேற, தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும்.என தெரிவித்துள்ளார்.