காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக பிரதமரும் பாஜகவும் நடந்துகொண்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூரியுள்ளார். தமிழர்களின் நலம் காக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்று காங்கிரஸின் முதல்வரே கூறியுள்ள சம்பவம் தமிழக தி.மு.கவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உதயநிதியை கண்டிக்க வேண்டும் என தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் கூறியிருப்பதற்கும் திமுக தரப்பிலிருந்து எந்தவித ரியாக்சனும் இல்லை.
மக்களவை தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது இதனை தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை தொட்டுள்ளது. அங்கே தமிழர்களுக்கும் கன்னடர்களுக்குமான இன உணர்வை தூண்ட காவேரி நீர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்
ஆனால் அவர்களே அறியாமல் ஒரு உண்மையை கூறிவிட்டார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மேகதாட்டு அணைக்கு ஒப்புதல் தராமல் தடுத்து காலம் தாழ்த்தியது பா.ஜ.க அரசு.காவிரியில் இருந்து கர்நாடகவிற்கு கூடுதல் தண்ணீர் தர மறுத்தது பா.ஜ.க அரசு.காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமாக பிரதமர் மோடி இருந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.ஒரு முதல்வர்கூறிய மிகப்பெரிய பெரிய ஒப்புதல் வாக்குமூலம்இது தமிழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால்.அது ஏதோ தேசத்துரோக குற்றம் போல சித்தரிக்க முயன்று கொண்டிருக்கிறது காங்கிரஸ் !!

இப்படி ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை வைத்துக்கொண்டு தான் தமிழகத்தின் உரிமையை மீட்போம் என்று இங்கே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது காங்கிரஸ்.நான் ஒரு தமிழன் என்றெல்லாம் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது வழக்கம். ஆனால் தமிழ் உணர்வுகள் எல்லாம் கூட தேவையில்லை.தமிழர்களும் சக மனிதர்கள் என்று மதித்தாலே, இப்படி கர்நாடக முதல்வர் பேசுவதற்கு கடுமையான கண்டனங்கள் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து வந்திருக்க வேண்டும்.

ஆனால் அதைப்பற்றி எதுவும் கண்டுக் கொள்ளாமல். வேறு எப்படி எல்லாம் மக்களை பிளவுபடுத்தலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். இங்கே திமுக ஆட்சி இல்லாமல், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல், பாஜக ஆட்சி இருந்த சமயத்தில்.தமிழர்களும் கன்னடர்களும் சகோதரர்களாக ஒற்றுமையாக இருந்தார்கள் !!ஆனால் என்று இந்த இரண்டு தீய சக்திகளும் ஆட்சிக்கு வந்ததோ…. அன்று முதல் மாநிலங்களுக்கு இடையேயான பதற்றங்களை அதிகரிக்கும் வேளையில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு கொண்டு வருகின்றன !!
அதுவும் நாங்கள் தமிழர் விரோத போக்கை கொண்டவர்கள் என்பதை பெருமையாக கூறிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் !!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















