கேரளாவில் முதல் முறையாக பத்தனம் திட்டா லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் அனில் அந்தோனிக்கு ஆதரவாக அங்குள்ள தேவாலயங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.பத்தனம் திட்டாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஈஸ்டர்ன் ஆர் தோடக்ஸ் தேவாலயங்களின் பாதிரியார்கள் மற்றும் ஆர்தோடக்ஸ் தேவாலயங்களின் தலைவரான மார் சில்வனியஸ் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்த பாஜகவுக்கு ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம், சிறுவா்களுக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை கடந்த வாரம் திரையிட்டது. மேலும், இந்தத் திரைப்படம் குறித்து தங்களுக்குள் விவாதம் நடத்துமாறும், திரைப்படம் குறித்த விமா்சனத்தை எழுதுமாறும் சிறுவா்கள் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இடுக்கி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முக்கிய தேவாலயமான சிரோ மலபாா் கத்தோலிக்க தேவாலயம், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் சிறுவா்களுக்கு இந்தத் திரைப்படத்தை திரையிட்டது.காதல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதாக இடுக்கி கத்தோலிக்க மறைமாவட்டம் திங்கள்கிழமை விளக்கமளித்தது.
இது தொடா்பாக கத்தோலிக்க மறைமாவட்ட ஊடக பொறுப்பாளா் ஜின்ஸ் கரக்காட் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் சிறுவா்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு ‘காதல் உறவு’ என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் கடந்த வாரம் நடைபெற்றது. காதல் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த இந்தத் தலைப்பு தோ்வு செய்யப்பட்டது.
சிறுவா்களிடம் இதை எளிதாகக் கொண்டு செல்லும் வகையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்பட்டது’ என்றாா்.கத்தோலிக்க மறைமாவட்டம் சா்சைக்குரிய இந்தத் திரைப்படத்தை திரையிட்டது மாநிலத்தில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.மாநில பாஜக தலைவரும் வயநாடு மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கே.சுரேந்திரன், இந்தத் திரைப்படத்துக்கும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவித்தாா்.
கேரளாவில் சுமார் 18% உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் 15% உள்ள நாயர்கள் இரண்டு இனங்களும் தான் காங்கிரசின் மிகப்பெரிய வாக்கு வங்கிகள். கேரளாவில் சுமார் 24% உள்ள ஈழவர்கள் தான் இடதுசாரிகளின் மிகப்பெரிய வாக்கு வங்கி. இதனை உடைக்க பா.ஜ.க போராடிக் கொண்டு இருக்கிறது . ஆனால்
முடியவில்லை.
ஈழவர்களின் சமூக அமைப்பான எஸ்என்டிபி என்கிற ஸ்ரீநாராய ண குரு தர்ம பரிபாலனம் அமைப்பினை பிஜேடிஎஸ் அதாவது பாரதிய ஜன தர்ம சேனா என்கிற பெயருடன் கட்சியாக உருவாக்கி அதனை பிஜேபியுடன் கூட்டணி வைக்க முடிந்தபாஜகவால் அவர்களின் வாக்குகளை பெற முடியவில்லை?
எப்பொழுது நாயர்களும் ஈழவர்களும்இந்துக்களாக இணைந்து கை கோர்க்க இருக்கிறார்கள்? எப்பொழுது நாயர்கள் காங்கி ஸ் ஆதரவில் இருந்தும் ஈழவர்க ள் இடதுசாரிகள் ஆதரவு நிலை யில் இருந்தும் பாதை மாறி பிஜேபியை நோக்கி வருவார்கள்? என்கிற கேள்விகள் கேரளாவில்உள்ள பிஜேபியினரிடம் இருக்கிறது.
ஈழவ மக்களின் இடதுசாரிகளுக்கான ஆதரவு மற்றும் காங்கிரஸ் கட்சிக்கான நாயர்கள் கிறிஸ்த வர்கள் என்பது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல.அது கிட்ட த்தட்ட 65 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. விமோ சனா சமரம் என்கிற ஒரு போரா ட்டம் பற்றி கேள்விபட்டு இருக்கி றீர்களா…
கேரளாஅரசியலையே மாற்றிய போராட்டம். சுதந்திர இந்தியா வில் தேரந்தெடுக்கப்பட்ட முதல் இடதுசாரி அரசாங்கத்தை எதிர் த்து கேரளாவில் சிரியன் கிறிஸ் தவர்களும் நாயர்களும் முஸ்லி ம்களும் இணைந்து நடத்திய போராட்டமாகும்.எந்த ஒரு அரசியல் கட்சியும் த னக்கு ஆதரவாக ஒரு தளத்தை உருவாக்க நினைக்கும்.
இடது சாரிகள் கேரளாவில் தங்களு க்கு சாதகமான ஆதரவு தளத் தை உருவாக்க நினைத்து 1957 ல் ஆட்சிக்கு வந்தவுடன் நில சீர்திருத்தம் என்கிற பெயரில் அதிகளவில் நிலங்களை வைத் து இருந்த நாயர்களிடம் இருந்து பிடுங்கி ஈழவர்களிடம் அளிக்க ஆரம்பித்தார்கள். அதோடு 1959 ம் ஆண்டு துவக்கத்தில் கல்வி சீர்திருத்தம் என்கி ற பெயரில் கேரளாவில் உள்ள கல்வி நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தார்கள் இதனால் கேர ளாவில் பெருமளவில் கல்வி் நிலையங்களை வைத்து இருந்த சிரியன் கிறிஸ்தவர்கள் கொந்தளித்து போராட ஆரம்பித்தார்கள்
சிரியன் கிறிஸ்தவர்களுக்கு ஆ தரவாக நாயர்களும் களம் இற ங்கினார்கள்.அவர்களுக்கு ஆத ரவாக என்எஸ்எஸ் என்கிற நா யர் சொசைட்டி சர்வீஸ் என்கிற நாயர்களின் சமூக அமைப்பும் போராட்டத்தில் இறங்கியது சரிப்பா சிரியன் கிறிஸ்தவர்க ளுக்கு ஆதரவாக நாயர்கள் ஏன் போராடினார்கள் என்று நீங்கள்
கேட்கலாம்.நிறைய நாயர்கள் ஆங்கிலேயர்கள் அளித்த பண த்தினால் மதம் மாறி சிரியன் கி றிஸ்தவர்களாகி விட்டார்கள்.
கேரளாவில் இருக்கும் 18 சதவீத கிறிஸ்தவர்களிடையே அதிக அளவில் இருப்பவர்கள் சிரிய ன் கிறிஸ்தவர்கள் தான்.அதாவ து சுமார் 15 சதவீதம் இருக்கிறார்கள். சிரியன் கிறிஸ்தவர்கள் இன நாயர்கள் என்பதால் இந்துநாயர்களும் சிரியன் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக எப்பொழுதும் இருப்பார்கள். 1959 ல் நம்பூதிரிபாடு தலைமையில் இருந்த இடதுசாரிகள் அரசு கொண்டு வந்தநிலசீர்திருத்தம் கல்வி சீர்திருத்தங்களை எதிர்த்து நாயர்களும் கிறிஸ்தவ நாய ர்களான சிரியன் கிறிஸ்தவர்க ளும் போராட ஆரம்பிக்க இடது சாரிகளின் அரசியலினால் பா திக்கப்பட்ட முஸ்லிம்களும் ஒன் று சேர கேரளாவில் போராட்டங் கள் வெடிக்க ஆரம்பித்தது
1959 ஜூன் மாதம் 13 ம் தேதி அ ங்கமலே என்கிற இடத்தில் ந டைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தசம்பவ இடத்திலேயே 7 சிரியன் கிறிஸ்தவர்கள் இறந்து போனா ர்கள். பிறகு அவர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு இடதுசாரிகள் அரசுக்கு எதிராக சிரியன் கிறிஸ்தவர்கள் நாயர்கள் உட ன் நாயர்களின் குரு பீடமான என்எஸ்எஸ் அமைப்பு நடத்திய பேரணிகள் இருக்கிறது அல்லவா..
இந்த போராட்டத்திற்கு தான் விமோசனா சமரம் என்று பெய ராகும.அதாவது இடதுசாரிகளி டம் இருந்து கேரளாவை விடுவி க்கும் சுதந்திர போராட்டம் என் று கூறப்பட்டது..மாநிலம் முழுவ தும் அப்பொழுது நடைபெற்ற இடதுசாரிகள் எதிர்ப்பு போராட் டத்தை கண்ட நேரு இனியாவது கேரளா நிம்மதியாகட்டும் என்று
1959 ஜூலை 31 ம் தேதி நம்பூதி ரிபாடு அரசினை டிஸ்மிஸ் செய் துவிட்டார்.
அதை இன்றும் நினைத்து பார்த் துக்கொண்டு தான் சிரியன் கி றிஸ்தவர்களும் நாயர்களும் கா ங்கிரஸ் ஆதரவாளர்களாக இரு க்கிறார்கள்.அது மட்டுமன்றி கேரளாவில் சுமார் 28% உள்ள முஸ் லிம்களும் காங்கிரஸ் ஆதரவில்தான் இருக்கிறார்கள்.பதிலுக்கு நாயர்களால் சமூக ரீ தியாக பாதிக்கப்பட்ட ஈழவமக்க ள்நாராயண குருவினால் தங்க ளுக்கு கிடைத்த சமூக அந்தஸ் தையும் இடதுசாரிகள் அரசினா ல் கிடைக்க பெற்ற இடங்களை யும் தக்க வைக்க இடதுசாரிக ளின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டார்கள்.
பிஜேபி கேரளாவில் உள்ள 54% இந்துக்களில் 15% நாயர்களையும் 24% ஈழவர்களையும் இணைத்து ஒரு அரசியல் மாற்றத்தை ஏ ஏற்படுத்த முனைந்தது. ஆனால் முடியவில்லை. அதனால் இப்பொழுது கேரளாவில் உள்ள காங்கிரஸ் VS இடதுசாரிகள் எதிர்ப்பு அரசியலின் மூலமாக கேரள அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது.கேரளாவில் இந்த லோக்சபா தேர்தலில் பிஜேபி நிச்சயமாக 2-3 தொகுதிகளில் வெற்றி பெறும்.
இதற்கான காரணம் இடது சாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இருக்கும் கடுமையான எதிர்ப்பு அரசியல் இப்பொழு து உச்ச கட்டத்தில் இருக்கிறது.இதன் விளைவாக தான் பிஜேபி கேரளாவில் முதல் முறையாக 2-3 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற இருக்கிறது. வழக்கமாக திருவனந்தபுரம் திரிச்சூர்போன்ற தொகுதிகளில் பிஜேபிவெற்றி பெற வாய்ப்புகள் இருந்தும் வாக்குப்பதிவின் பொழுது இடது சாரிகள் பிஜேபி வெற்றிப்பெற கூடாது என்பதற்காக அங் கு காங்கிரஸ் வேட்பாளர்களுக் கு வாக்களித்து பிஜேபியை தோற்கடித்து வருகிறார்கள்.
ஆனால் இந்த தேர்தலில் இடதுசாரிகள் பிஜேபியை சில தொகுதிகளில் வெற்றி பெற வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்க இருக்கிறார்கள். கேரளாவில் பிஜேபி இப்பொழுது சில தொகுதிகளில் வெற்றிபெற்றால் அது இடது சாரிகளுக்கு தான் அரசியல் ரீதியாக பலன் அளிக்கும்.ஏன் என்றால் இப்பொழுது உள் ள நிலையில் இடதுசாரிகளால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற முடியாது.
ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் பிஜேபி சில லோக்சபா தொகுதிகளில் வெற்றிபெற்றால் பிஜேபி காங்கிரசில் இருந்து பல தலைவர்களை இ ழுத்து காங்கிரசை பலவீனமாக்கி கேரளாவில் காங்கிரசை அழிக்கும் முயற்சிகளில் இறங்கி விடும்.அதனால் காங்கிரஸ் சார்பு வாக்குகள் பிஜேபியை நோக்கி நகர
ஆரம்பித்து விடும்.
இனி வருகின்ற காலங்களில் காங்கிரஸ் ஆதரவு கிறிஸ்தவ வாக்குகள் கூடபிஜேபியை நோக்கி நகர ஆரம்பிக்கும். அதே நேரத்தில் காங்கிரஸ் ஆதரவு முஸ்லிம் வாக்குகள் இடதுசாரிகளை நோக்கி நகரும்.இது நடைபெற்று விட்டால் அடு த்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் இடதுசாரிகள் தான் வெற்றி பெறுவார்கள்.
2026தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடையும் பொழுது காங்கிர ஸில் இருந்து நிறைய தலைவர்கள் பிஜேபியை நோக்கி நகர்ந் து விடுவார்கள்.அப்பொழுது இடதுசாரிகள் தான் கேரளாவில் அசைக்கமுடியாத சக்தியாக மாறி விடுவார்கள்.இடதுசாரிகள் VS காங்கிரஸ் என்று போட்டி இருந்தால் இடதுசாரிகள் ஆட்சியை இழந்து விடுவார்கள்.ஆனால் இடதுசாரிகள் VS பிஜேபி என்று போட்டி இருந்தால் இடதுசாரிகளால் இன்னும் பல தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்க முடியும்.
அதனால் இந்த லோக்சபா தேர் தலில் கேரளாவில் பிஜேபி சில தொகுதிகளில் வெற்றி பெற இடது சாரிகளே துணை நிற்பார்கள்.துணை நிற்பார்கள் என்றால் இடதுசாரிகள் பிஜேபி வாக்களிப்பார்கள் என்று அர்த்தம் அல்ல பிஜேபி VS காங்கிரஸ் என்று போட்டி உள்ள தொகுதிகளில் ஓட்டுக்களை பிரித்து காங்கிரஸ்
வேட்பாளர்கள் தோல்வியடைய துணை நிற்பார்கள்.
அதனால் தான் இந்த முறை கேரளாவில் பிஜேபி 20+ ஓட்டுக்கள் மற்றும் 2-3 லோக்சபா தொகுதிகளில் வெற்றி என்கிற நம்பிக்கையோ டு இருக்கிறது.பிஜேபி தமிழகத்தில் அதிமுக அழிப்பு கேரளாவில் காங்கிரஸ்அழிப்பு என்கிற வியூகங்களுட ன் இந்த லோக்சபா தேர்தலை சந்தித்து வருகிறது. இதனால் ஆரம்பத்தில் பிஜேபியின் சித் தாந்த எதிரிகளான திமுகவும் இடதுசாரிகளும் பலன் அடைந்தாலும் எதிர்காலத்தில் தமிழ்நாடுகேரளாவில் ஆட்சி கட்டிலில் அமர வழி கிடைக்கும்.