Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கஞ்சா போதையில் வழிப்பறி பட்டப்பகலில் அதிர்ச்சி! 18 வயது இளைஞர்கள் 3 பேர் கைது!

Oredesam by Oredesam
April 24, 2024
in செய்திகள், தமிழகம்
0
kanja bothai

kanja bothai

FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் மாவட்டத்தில், கஞ்சா போதையில் குமாஸ்தாவை வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் செல்போன், பைக் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், விஜயபுரம் அருகே பாரதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஏப்.22) மாலை விஜயபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் நேதாஜி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நெய் விளக்கு தோப்பு என்கிற இடத்தில் சரவணனை வழிமறித்து, மூன்று இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தொடர்ந்து அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் சரவணன் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு பேபி டாக்கீஸ் சாலை வழியாக சென்றுள்ளார். மற்ற இருவரும் அவரை அருகில் உள்ள நகராட்சி கழிவறை கட்டிடத்திற்குள் கொண்டு சென்று அங்கு அவரை தாக்கி செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சரவணன் இது குறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த ராகவன் (வயது 19), ரஞ்சித் குமார் (வயது 18), வினோத் (வயது 23) ஆகிய மூன்று நபர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் இளைஞர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த மூன்று பேர் மீது ஏற்கனவே கஞ்சா போதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.

எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கஞ்சாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கலந்தாய்வு வழங்கி குற்ற செயலில் ஈடுபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே திருவாரூர் நகர மக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் கப்பலில் நாடு திரும்பினர் .

மாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் கப்பலில் நாடு திரும்பினர் .

May 18, 2020
ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

June 29, 2022
இயக்குநர் விசு மரணம் தொடர்பாக பொய் செய்தியை பரப்பிய நியூஸ் 18 தமிழ் போட்டுடைத்த எஸ்.வி சேகர்!

இயக்குநர் விசு மரணம் தொடர்பாக பொய் செய்தியை பரப்பிய நியூஸ் 18 தமிழ் போட்டுடைத்த எஸ்.வி சேகர்!

March 23, 2020
அசாதுதீன் உவைசிக்கு ஆரம்பமே வெற்றி ….

அசாதுதீன் உவைசிக்கு ஆரம்பமே வெற்றி ….

January 2, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x