2021-22ம் ஆண்டில் டில்லி ஆளும் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைந்த்துள்ளது அமலாக்கத்துறை.
இந்த வழக்கில் ஏற்கெனவே டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா,மற்றும் சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள். தற்போது அரவிந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா டெல்லியிலிருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு, சென்னைக்கும் வரும்….” என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரை கவர்வதற்காக, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக பிரித்தாளும் தேர்தல் சித்து விளையாட்டை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் தேர்தல் விதிமுறையை மீறவில்லை. அங்கு 90 வினாடிகள் பேசிய பிரதமர், முஸ்லிம் என்ற வார்த்தையை ஒருமுறைகூட பேசவில்லை. தேர்தல் ஆணையத்திடம் பிரதமருக்கு எதிராக மனு அளித்தாலும், மத ரீதியாக பிரதமர் பேசாததால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்றார்.
டெல்லியிலிருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு, சென்னைக்கும் வரும். சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு சிறைக்குச் செல்வார்கள். அதில் அமைச்சர், முதலமைச்சர் இருக்கிறார்களா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.மணல் குவாரி வழக்கில் இ.டி-யில் ஆஜரான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பல தகவல்கள் தெரியும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆஜராகி உள்ளனர்” என்றார்.