Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

குருபெயர்ச்சி – மிதுன ராசிக்காரர்களே இந்த கோவிலுக்கு செல்லுங்கள் முயற்சி வெற்றி அடையும்! சோதனைகள் இல்லை.!

Oredesam by Oredesam
April 28, 2024
in செய்திகள், தமிழகம்
0
மிதுனம் குருபெயர்ச்சி

மிதுனம் குருபெயர்ச்சி

FacebookTwitterWhatsappTelegram

மிருகசீரிடம் 3, 4 ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ராசி எதுவென்று தெரியாத ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; க, கா, கி, கு, கூ, கோ, கை, ங, ச, சே, ஹ… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும். ராசியின் அதிபதி: புதன். நட்சத்திர அதிபதிகள்: செவ்வாய், ராகு, குரு. பாதகாதிபதி: குரு. மாரகாதிபதி: செவ்வாய், குரு.

மிகச்சிறப்பு தரும் மிதுனம்
வித்தை, புத்தி, ஆற்றல் காரகனான புதனின் அம்சத்தில் பிறந்து, சாதுர்யமாக எந்தவொரு செயலையும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நண்பர்களே!

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

புத்தி கூர்மையும், அறிவாற்றலும், சாதுரியமும், நிர்வாகத் திறமையும் கொண்டு, அடுத்தவரை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, அவர்கள் வெற்றி அடைவதற்கு வழிகாட்டக் கூடியவராக நீங்கள் இருப்பீர்கள். உங்களின் சிந்தனைகளும், செயல்களும் மேலோங்கியதாகவே இருக்கும். வல்லமை மிக்கவர்களான உங்களின் ஒவ்வொரு செயலும் வெற்றிக்குரியதாகவே இருக்கும். பொது நலனில் நாட்டம் உடையவர்களான நீங்கள், யாம் பெற்ற இன்பத்தை இவ்வையமும் பெற வேண்டும்’ என்று எண்ணக்கூடியவர்களாக இருப்பீர்கள்.

எதிலும் நிரந்தரமான ஈடுபாடு கொள்ளாதவரான உங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அதே நேரத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? என்ன நினைப்பார்கள்? என்பது பற்றியெல்லாம் வருத்தப்பட மாட்டீர்கள். யோசிக்கவும் மாட்டீர்கள். அதில் முழுமையாக இறங்கி வெற்றியை எட்டி விடுவீர்கள். தன்னம்பிக்கையும், பரிபூரண சிந்தனையும் உங்களை வெற்றியாளராக்கிவிடும்.

ஞாபக சக்தி அதிகம் உடையவர் நீங்கள் என்பதால் வேண்டாத விஷயங்களை உங்கள் மனதில் பதியவைத்துக் கொண்டிருப்பீர்கள். அதன் காரணமாக உங்கள் முன்னேற்றத்தில் தடைகள் உண்டாகலாம். உங்களிடம் பழகுபவர்களை எடை போடுவதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். எல்லாவற்றையும் யூகித்து அறிவதிலும் திறமைசாலியாக இருப்பீர்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மற்றவர்களால் கண்டறிய முடியாது. ஆனால், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கிரகிக்கும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும், எல்லாவற்றிலும் பெயர் பதித்திட வேண்டுமென்ற எண்ணம் உடையவரான உங்களை ‘மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்’ என்று சிலர் அழைப்பார்கள்.

பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால், நேரம் கிடைக்கும்போது ஓய்வெடுத்துக்கொள்வது உங்கள் உடல் நலனுக்கு நல்லது. உலகத்தில் உள்ள எல்லாமும் உங்களுக்கு தெரியும் என்ற நினைப்பு மனதில் இருக்கும். என்றாலும், எதையும் முழுமையாக தெரிந்திருக்க மாட்டீர்கள். ஆனால், உங்களுக்கு தேவையானவற்றை மிகத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள்.

ஆலோசனைகள் சொல்வதில் கெட்டிக்காரரான நீங்கள் தைரியத்தில் குறைவானவர் என்றே சொல்ல வேண்டும். ஒரு சில கெட்ட பழக்கங்களுக்கு உங்களில் சிலர் அடிமையாகவும் வாய்ப்புண்டு. உங்களில் பலர் கடன் வாங்குவதற்கு அஞ்சுவீர்கள். அப்படியே வாங்கினாலும் அதை அடைத்துவிட முயல்வீர்கள். உங்களுக்கு சுய சிந்தனைதான் முக்கியம் என்பதால் அதைக்கொண்டு சொந்த வியாபாரம் செய்தால் ஆதாயம் கிடைக்கும். மற்றவர்களைக்காட்டிலும் உங்களுக்கு லாபம் கொழிக்கும். பொருள்வளம் அதிகரிக்கும்.

எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் எண்ணம் உலகிற்கும் உங்கள் வாழ்விற்கும் ஏற்றவாறு இருக்கும். உங்கள் திறமை உங்களை மேலும் மேலும் முன்னேற்றம் அடைய வைக்கும் உங்கள் மனமும் கனவும் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பதை உங்களுக்கு உணர்த்தும்.

பழமைகளை வெறுத்திடக் கூடியவர்களாக நீங்கள் இருந்தாலும் இன்றைய நிலைக்கேற்ப பழமையை மாற்றக்கூடிய மெருகூட்டக்கூடிய ஆற்றல் உங்களுக்கிருக்கும்.உங்களுடைய முயற்சிகள் எடுத்த எடுப்பிலேயே வெற்றி அடையாது என்பதால் மனம் தளராது ஒவ்வொரு முயற்சியையும் தொடருங்கள். உங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் கண்டிப்பாக நிறைவேறும்.

யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு பெற்ற நீங்கள், மற்றவர்களைப் பயன்படுத்தி வெற்றிகளை அள்ளிக் குவிப்பீர்கள். நீங்கள் மனம் தளரும் நேரங்களில் உங்களுடன் தொழில்துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு கிடைக்கப்பெறும். அதனால் வெற்றியும் ஆதாயமும் உண்டாகும்.

வாலிப வயதிலிருந்து உங்களுக்கு பணம் சம்பாதிக்கும் ஆற்றலும் வாய்ப்பும் வெற்றிகளும் உண்டாகிவிடும். அதிர்ஷ்டங்களில் உங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்காது. எனவே உழைக்காமல் வரும் வருமானத்தின் மீது உங்களுக்கு ஆசை இருக்காது. முதலீடு செய்வதில், எப்போது லாபம் உண்டாகும்? எப்போது நஷ்டம் ஏற்படும்? என்பதையும் உங்களுடன் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலைகளையும் செயல்களையும் வைத்து தெரிந்து கொண்டு எச்சரிக்கையாகிவிடுவீர்கள்.

உங்களுக்கு பகைவர்கள் தொல்லை இருக்காது. கடுமையான விரோதம் ஏற்படாது. என்றாலும், உங்களுடைய மனநிலையின் வெளிப்பாடுகளால் நட்பில் விரிசல்களும் பகையும் உண்டாகும். துலாம், கும்பம், மேஷம் ராசியினருடன் பழகுவதும், நட்புக் கொள்வதும், திருமண பந்தம் கொள்வதும் உங்களுக்கு மகிழ்ச்சியையும் நன்மைகளையும் வாரி வழங்கும்.

உங்கள் ராசிநாதன் புதன் வித்யாகாரகன் என்பதால் கல்வியில், கேள்விகளில், ஞானத்தில், அறிவில் நீங்கள் வல்லவராக விளங்குவீர்கள். உங்களுக்குக்கிடைத்த அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேறுவீர்கள். உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து இல்லை என்ற விதத்தில் வாதம் புரிவதில் வல்லவராக விளங்குவீர்கள்.

தனக்கு இருக்கிறதோ இல்லையோ பிறருக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உங்களுக்கிருக்கும். பேச்சையே மூலதனமாக கொண்டு செயல்படும் உங்களுக்கு ஆசிரியர் பணி, வழக்கறிஞர் பணி, ஆலோசகர், லீகல் அட்வைசர், பிரச்சாரகர், ஷேர் மார்க்கெட் என்பவற்றில் ஈடுபட லாபம் உண்டாகும். வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் பணம் சம்பாதிக்க வேண்டும், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கும்.

அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நீங்கள், நேரத்திற்கேற்ப உங்கள் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் மாற்றிக்கொண்டு உங்களுக்கு சரியெனப் பட்ட பாதைக்கு மாறிவிடுவீர்கள். பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதிக்கும் திறனும், மனதில் பட்டவற்றை மறைக்காமல் சொல்லுகின்ற தைரியமும் உங்களுக்குண்டு. எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் நீங்கள் வாங்கிவந்த வரம் என்று கூட சொல்லலாம். இவையெல்லாம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களின் பொதுப் பலன்களாகும்.

மிதுன ராசியில் நீங்கள் பிறந்தவராக இருந்தாலும், ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும். லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசம் இருக்கும். பொதுவாக ஒருவருக்கு அமைந்திருப்பதுபோல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது. என்பதால், ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப் போகும் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையை அடைந்திருப்பவர்களுக்கும் கோட்சார பலன்கள் நன்மைகளை வழங்கிடக் கூடியவையாக உள்ளன. அந்த ரீதியில் சுப கிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.

சுபச்செலவுகளை உண்டாக்கப்போகும் விரயகுரு

கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான மிதுன ராசிக்கு 11 ம் வீடான மேஷத்தில், லாப குருவாக சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்கி, வேதனைகளில் இருந்தும், சோதனைகளில் இருந்தும் உங்களைக் காப்பாற்றி, நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான், 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான ரிஷப ராசியில் சஞ்சரித்து பலன்களை வழங்கிடப் போகிறார்.

பதினொன்றாம் இடத்தில் குரு சஞ்சரித்த காலம் பொற்காலம் என்றால் 12 ல் சஞ்சரிக்கும் காலம் மோசமான காலமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கு ஒரு பழம் பாடல், ‘வன்மையற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் வீழ்ந்ததும்…’ என்று பதில் கூறுகிறது. 12 ல் குரு சஞ்சரித்த காலத்தில்தான் ராவணனுக்கு கண்டதோஷம் ஏற்பட்டது. 12 ம் இடம் என்பது சங்கடமான பலன்களை வழங்கிடக்கூடிய இடம் என்றாலும், நமது செயல்பாட்டின் வழியாக தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற நிலையை உருவாக்கிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நம் கைவசம் பத்து லட்ச ரூபாய் பணம் இருக்கிறது. அது நம்மிடமிருந்தால் திடீரென உடல்நிலை பாதிக்கலாம்! நாம், விபத்தில் சிக்கலாம்! அந்த நேரத்தில் நம்மிடம் இருக்கும் பணத்தை செலவு செய்து நாம் உயிர் பிழைத்து வரலாம்! காரணம், நம்மிடம் இருக்கும் பணம் எப்படியாவது விரயமாக வேண்டும் என்ற நிலைதான்.

பணம் விரயமாகும் என்பது விதியாக இருக்கும்போது, நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து நிலம் வாங்கினால்? வீடு கட்டினால்? சுபநிகழ்ச்சிகள் நடத்தினால்? பணம் செலவாகும். ஆனால், அந்த செலவும் நமக்கு ஆதாயமானதாக இருக்கும். இதையே சுப விரயம் என்போம்.

விதியை மதியால் வெல்லும் வழிகளில் இதுவும் ஒன்று. இந்த வருடம் விரய காலம்தானா? வரவுகளுக்கு இடமே இல்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.இக்காலத்தில் உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால், தசா புத்தி நன்றாக இருந்தால், இந்தப் பலனின் நிச்சயமாக மாறுதல் இருக்கும். சரி 12 ம் வீட்டிற்கு வரும் குரு பகவான் என்னதான் செய்வார்?

ஜாதகத்தில் 12 ம் இடம் என்பது விரயஸ்தானம். அயன, சயனஸ்தானம். ஆகும். வீண் செலவுகள், பொன் பொருள் நஷ்டமடைதல், சயன சுகம், போக சுகம், மோட்சம், அரசு தண்டனை ஆகியவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய இடம் இதுவாகும்.

கோட்சாரத்தில் 12 ல் வரும் குரு பகவான், வீண் செலவுகளை உண்டாக்கி, இருப்பதைக் கரைய வைப்பார். செய்யும் தொழிலில் திருப்தி இல்லாமல் போக, வேறு தொழில் தொடங்கலாமா என்ற யோசனையை ஏற்படுத்துவார். அதனால், அலைச்சலும், பொருள் விரயமும் உண்டாகி நிம்மதி பறிபோகும். ஒரு சிலர், அரசு வழியில் சிக்கலையும் சந்திக்க நேரும். எதிர்பாலினரால் சிலருக்கு விரயம் உண்டாகும். அடுத்தவருக்கு உதவி செய்யப்போக அதனால் சிரமத்துக்கு ஆளாகும் நிலை சிலருக்கு ஏற்படும். எந்த ஒரு செயலிலும் தடை, தாமதம். அதனால், விரயம் என்றிருக்கும். காரணம், குரு பகவான் எந்த இடத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த இடத்திற்கு நற்பலன்களை வழங்காமல் அவர் பார்க்கும் இடங்களுக்கு மட்டுமே நற்பலனை வழங்கக்கூடியவர் என்பதுதான்.

இது பொதுவான பலன் என்றாலும், குரு பகவான் உங்களுக்கு சப்தமாதிபதி, ஜீவனாதிபதி என்பதால், உங்களுக்கு அவர் சோதனைகளை உண்டாக்க மாட்டார்.

பார்வைகளால் உண்டாகும் பலன்கள்
விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் சஞ்சரித்து அந்த இடத்திற்குரிய பலனை விரயப்பலனாக வழங்கப் போகும் குரு பகவான், அங்கிருந்து தன் 5, 7, 9 ம் பார்வைகளை உங்கள் ராசிக்கு 4, 6, 8 ம் வீடுகள் மீது செலுத்திட இருக்கிறார் என்பதால், இந்த 3 இடங்களும் இக்காலத்தில் உங்களுக்கு சுபிட்சங்களை வழங்கிடப் போகிறது.
குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையின்படி இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் இடத்தைவிட பார்க்கும் இடங்கள் சிறப்பாகும்.

முதலில் தனது 5 ம் பார்வையினால் உங்கள் ராசிக்கு 4 ம் இடமான சுகஸ்தானத்தை பார்க்கும் குரு பகவான் உங்கள் நிலையில் பலவித முன்னேற்றங்களை உண்டாக்குவார். இதுவரையில் உங்கள் உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி ஆரோக்கிய நிலையை இப்போது அடைவீர்கள். மீண்டும் சுக வாழ்வில் திளைப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு இருந்தால் அதைப் பழுது பார்த்து புதுப்பிப்பீர்கள். ஒரு சிலர் புதிதாக நிலம் அல்லது வீடு வாங்குவீர்கள். ஸ்திர சொத்துக்கள் உங்கள் பெயரில் அமையும். கல்வி பயிலும் மாணவ மாணவியர் ஏற்றமடைவீர்கள். ஆசிரியர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். தாய்வழி உறவு பலப்படும். தாயாருக்கு ஏற்பட்டிருந்த உடல் பாதிப்பு மாறி சகஜ நிலைக்கு வருவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். ஆலயங்களுக்கு சென்று வேண்டுதலை முடிப்பீர்கள்.

அடுத்து, தனது 7 ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6 ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தைப் பார்க்கும் குரு பகவான், இதுவரை உங்களுக்கிருந்த சங்கடங்களை இல்லாமல் செய்வார். எதிர்ப்புகளால் அனுபவித்த சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். பகைவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். கடன் தொல்லையாலும் எதிரிகளின் கலகத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலை மாறும். அவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள். நோய்களுக்கு ஆளாகி சங்கடப்பட்டு வந்த நிலை மாறி புது எழுச்சியுடன் நடமாட ஆரம்பிப்பீர்கள். எதிர்பாலினர் வழியே சங்கடங்களை சந்தித்து வந்த நிலை மாறும். மனமும் உடலும் மீண்டும் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில் உங்கள் நிலை மாறும். ஆரோக்கியம் சீராகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அடுத்து, தனது 9 ம் பார்வையை உங்கள் ராசிக்கு 8 ம் இடமான ஆயுள் மற்றும் அஷ்டம ஸ்தானத்தின்மீது செலுத்தும் குருபகவான், இதுவரை நீங்கள் சந்தித்து வந்த தொல்லைகளில் இருந்து உங்களுக்கு விடுதலையை உண்டாக்குவார். உடல் நிலையில் ஏற்பட்ட கடுமையான சங்கடங்கள் இனி அகலும், பயம் விலகும். செய்தொழில் முடங்கி அதனால் வருமானம் குறைந்து, வாழ்வா சாவா என்ற நிலையை சந்தித்து வந்த உங்கள் வாழ்க்கை இனி சிறப்படையும். வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள் என்ற நிலை மாறும். முயற்சிக்குமேல் முயற்சி மேற்கொண்டும் தோல்வி என்று துயரத்தில் சிக்குண்டு வேதனையில் வாடிக்கொண்டிருந்த உங்களுக்கு இக்காலத்தில் அவற்றிலிருந்து விடுதலைக்கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் எலியும் பூனையுமாக வாழ்ந்தநிலை இனி மாறும். நீண்டகால நோய்களுக்கும் சிகிச்சை மேற்கொண்டு குணமடைவீர்கள். உடல் உபாதைகள் விலகும். வாழ்க்கையில் சந்தித்த அவமானங்கள் இனி ஏற்படாமல் போகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

இவை யாவும் குரு பகவான் தன் பார்வைகளால் உங்களுக்கு வழங்கிடப் போகும் நற்பலன்கள் ஆகும்.

பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் 12 ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமாக இல்லை என்ற நிலையில், 3.5.2024 முதல் 2.6.2024 வரை அவர் அஸ்தங்கம் அடைவதால் இக்காலத்தில் அவரால் ஏற்படும் பாதகங்கள் ஏற்படாமல் போகும். இருந்தாலும் ஞானக்காரகன் அஸ்தங்கம் அடைவதால் உங்கள் செயலிலும் சிந்தனையிலும் குழப்பங்கள் உண்டாகும்.

வக்ர காலம் உங்களுக்கு வசந்த காலம்
குரு பகவானின் சஞ்சார நிலையில், அஸ்தமனமும் வக்கிர நிலையும் ஏற்படுவதால் அக்காலத்தில் அவர் வழங்கும் பலன்களிலும் மாற்றம் உண்டாகும். 15.10.2024 முதல் 11.2.2025 வரை குரு வக்ரமடைவதால் விரய ஸ்தானத்தில் இருந்து அவர் வழங்கிவரும் பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக குரு பகவான் வக்கிரம் அடையும்போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால், இக்காலத்தில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். விரயச் செலவுகள் கட்டுப்படும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். தடைபட்ட முயற்சிகள் எல்லாம் இனி நடந்தேறும்.

பாக்ய சனியால் முன்னேற்றம்
ரிஷப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், சனி பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் விரும்பிய யாவும் உங்கள் கைக்கு வந்து சேரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். முயற்சி எல்லாம் வெற்றியாகும். விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் தோன்றும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல் வாதிகளின் மதிப்பு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். வேலைத்தேடும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் விருப்பம் நிறைவேறும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். களவுபோன பொருள் கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும்.

ராகு – கேது சஞ்சாரப் பலன்கள்
குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், ராகு ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்திலும், கேது சுகஸ்தானமான நாலாம் இடத்திலும் சஞ்சரிப்பதால், வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். கேட்காத கடனும் கெடும் பார்க்காத பயிரும் கெடும் என்பதுபோல் இக்காலத்தில் உங்கள் அக்கறை எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விருப்பப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டாகும்.

சூரியனால் உண்டாகும் ராஜயோகம்
ஒவ்வொரு கிரகமும் அவரவர் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப பலன்களை வழங்குவது போல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது அதிர்ஷ்டமான பலன்களை வழங்குவார். அக்காலத்தில் ஜாதகருக்கு எல்லா விதத்திலும் நன்மைகள் உண்டாகும். அந்த ரீதியி் மிதுன ராசியினரான உங்களுக்கு, ஆவணி. கார்த்திகை. பங்குனி. சித்திரை ஆகிய நான்கு மாதங்களிலும் உங்கள் நிலையிலிருந்த சங்கடங்களை இல்லாமல் செய்வார். செல்வாக்கை அதிகரிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்குகளில் சாதகத்தை ஏற்படுத்துவார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழில் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களிலும் இக்காலத்தில் லாபத்தை ஏற்படுத்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கச் செய்வார். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சிகளை நிறைவேற்றி வைப்பார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகளை இக்காலத்தில் உங்களுக்கு வழங்குவார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய சொத்து சேர்க்கையை உண்டாக்குவார்.

பொதுப்பலன்
செய்து கொண்டிருக்கும் தொழில் முன்னேற்றம் அடையும். என்ன சிரமம் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். சொந்தமாக வீடு கட்டி அதில் குடியேற வேண்டும் என்ற உங்கள் கனவு இக்காலத்தில் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் வழியாக உங்களுக்கு சரியான ஆலோசனைகள் இக்காலத்தில் கிடைக்கும். அதனால் தொழில் உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உங்களுக்கு இக்காலத்தில் ஆதரவாக இருப்பார்கள். இப்போதுள்ள நிலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடர்வதால் நன்மைகள் அதிகரிக்கும்.

பரிகாரம்
திருவெண்காடு சென்று புத பகவானுக்கு பச்சைப் பட்டுடுத்தி வேண்டி வணங்கி வழிபட்டுவர உங்கள் சிந்தனைத் தெளிவாகும். முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

EaseMyTrip

மாலத்தீவுக்கு மரண பயத்தை காட்டிய இந்தியவிமான சேவை நிறுவனங்கள்.. சமரசத்திற்கு முயலும் மாலத்தீவு..

January 11, 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை! அடுத்த அதிரடிக்கு தயாராகிறதா மோடி அரசு

November 27, 2020
களம் இறங்கியது பா.ஜ.க அடிபணிந்தது தி.மு.க! எல்லா நாட்களும் கோயில்களை திறக்க திமுக அரசு அனுமதி!

திராவிடர் கழக மாநாட்டை தடை பாஜக அதிரடி…

August 31, 2022

ரங்கராஜ் பாண்டே ரஜினியின் மூணு வரிகளுக்கு முப்பது நிமிடத்துக்கு மேல் இண்டெர்ப்ரட்டேஷன் கொடுத்திருக்கிறார்.

March 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x