தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் விஜய் தற்போது அரசியல் கட்சி தலைவராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடி வரை சம்பளமாக வாங்கிவரும் விஜய் நடிப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கரியரின் உச்சத்தில் இருக்கும்போது விஜய் இவ்வாறு முடிவெடுத்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது .
இந்த நிலையில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விஜய் நடித்த வேட்டைககரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வந்து நடனமாடினார். பின் அவர் நடிகராக வலம்வருவார் என நினைத்த நிலையில்அவரை சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை. அப்பா நடிகர் என்பதால் சஞ்சயும் நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். அதுவும் லைக்கா நிறுவனம் அவரின் படத்தை தயாரிப்பதாக செய்திகள் வந்ததும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகமே ஆச்சர்யப்பட்டது.
லண்டனில் சினிமா இயக்கம் பற்றி படித்திருக்கும் சஞ்சய் நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களில் வேலை செய்திருக்கிறார் என நம்பப்படுகிறது. பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அழைத்தும் நடிக்க விருப்பமில்லை என சொல்லிவிட்டார். ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்பதே சஞ்சயின் விருப்பமாக இருக்கிறது.
இந்த நிலையில் லைக்கா தயாரிப்பில் சஞ்சய் படம் இயக்குகிறார் என்கிற செய்தி வெளியாகியாது ஆனால், கிணத்தில் போட்ட கல்லாக அப்படத்தின் அப்டேட் அப்படியே இருக்கிறது. கவினிடம் கதை சொல்லி இருக்கிறார், துல்கர் சல்மான் நடிக்கிறார் என பல செய்திகளும் வெளிவந்தது. ஆனால், இந்த தகவலை கவின் மறுத்தார்.

ஆனால், கவின் மற்றும் துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களிடம் ஜேசன் கதை சொன்னது உண்மைதான் எனவும், அவர்கள் கேட்ட சில விளக்கங்களுக்கு ஜேசனிடம் பதில் இல்லை என்பதாலும், இயக்கத்தில் அவருக்கு பெரிய அனுபவம் இல்லை என்பதாலும் அவரின் இயக்கத்தில் நடிக்க யாரும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.
அதோடு, அந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்கும் ஜேசன் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், விஜய் சேதுபதி எஸ்கேப் ஆகிவிட்டாராம். இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீனை இசையமைக்க வைக்க ஜேசன் ஆசைப்படுகிறார். அதேபோல், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் இதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.
ஆனால், பிரபலமான நடிகர்கள் யாரும் ஆர்வம் காட்டாததால் படம் டேக் ஆப் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. அதோடு, தன்னை நம்பாமல் படத்திற்கு ஆலோசனை கொடுக்க லைக்கா தயாரிப்பில் சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டிருப்பதும் ஜேசன் சஞ்சய்க்கு அப்செட்டை ஏற்படுத்தி இருக்கிறது.ஏற்கனவே ஒரு வருடம் போய்விட்ட நிலையில் இந்த வருடமாவது ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















