தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி உயர்வு – மோடி
கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வருங்காலத்திலும் பாஜகவின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.
ஜெகன்நாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஒடிஷாவில் பாஜக ஆட்சி தொடரும் – NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு.
அடிமட்டத்தில் இருந்து இறங்கி உழைத்ததால்தான் இவ்வளவு வலுவான கூட்டணி சாத்தியமானது.
காற்று கூட உள்நுழைய முடியாத அளவிற்கு கூட்டணிக்குள் ஒற்றுமை இருந்தால்தான் நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.
3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தேர்தல் காலங்களில் பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி இருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி தான் பெண்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கி இருக்கிறது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு பாஜக தலைமையிலான அரசு எப்போதும் முக்கியத்தும் அளித்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மதிப்பார்கள் என நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தேர்தல் காலங்களில் EVM இயந்திரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பிய எதிர்க்கட்சியினர் தற்போது அமைதி காத்து வருகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து இப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை.
ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கவே ஈவிஎம் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி – NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு
இந்தியாவின் ஜனநாயகம் பாதிக்கப்படுவதாக வெளிநாடுகளுக்கு சென்று சிலர் குற்றம் சாட்டினர்.
NDA கூட்டணியின் எண்ணிக்கையே சொல்கிறது எங்கள் பலம் எப்படி என்று.
அவர் பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















