விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
சமீப காலமாக பொன்முடிக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் பனிப்போர் நிலவி வந்தது இது மேடைகளிலும் எதிரொலித்தது. பொன்முடி இருக்கும் பொழுது விழுப்புரம் பகுதியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது என மறைமுக உத்தரவு போடப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் அவர் விழுப்புரத்தில் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். மேலும் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதையொட்டி பொன்முடியுடன் கலந்து பேசிய முதலவர் ஸ்டாலின் செஞ்சி மாஸ்தானை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்முடிக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது இது மேடைகளில் எதிரொலித்தது. கடந்த வருடம் விழுப்புரம் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தபட்டது இதில் பொன்முடி கலந்து கொண்டார். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செஞ்சி மஸ்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்த பொழுது முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியிலேயே அமைச்சர் பொன்முடி அவரை சராமரியாக பொது இடம் என்றும் பாராமல் திட்டியது முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி இருந்து வந்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராக செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் பொறுப்பில் இருந்தார்.
இந்த நிலையில், நிர்வாக செயல்பாடுகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையிடுவதாகக் கூறி, திமுக தலைமை மற்றும் முதலமைச்சருக்கு திண்டிவனம் நகராட்சியின் பொன்முடியின் ஆதரவாளர்களான 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
அதனைதொடர்ந்து, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டது.
சிறுபான்மையினர் காவலர் எனக்கூறி கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது மாவட்ட செயலாளர் பதவியை பறித்திருப்பது திமுகவில் உள்ள சிறுபான்மை மக்களினிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒட்டு வாங்கும் நாங்கள் தேவைப்படுகிறோம் தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் தேவை இல்லையா என கேள்விகளை எழுப்ப தொடங்கியுள்ளார்கள். பொன்முடி தான் முக்கியம் என்றால் நாங்கள் எதற்கு எங்கள் ஓட்டு எதற்கு என பொங்க தொங்கியுள்ளார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















