3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு முதன்முதலில் சென்றார். மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்பு கம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.பிரதமர் மோடி – புதின் சந்திப்பின் போது இருநாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.ரஷ்யாநாட்டின் மிக உயரிய விருதான “செயிண்ட் ஆண்ட்ரூ” விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்தார் ரஷ்யா அதிபர் புதின். இதனை ஏற்று கொண்ட பிரதமர், “எனக்கு அளித்த விருது 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த விருது” என பெருமிதம் கொண்டார்.
பிரதமர் மோடி அங்கு சென்ற நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு ‛நோஸ்கட்’ செய்துள்ளார். அதாவது சமீபத்தில் ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விட பிரதமர் மோடிக்கு அதிக மரியாதையை விளாடிமிர் புதின் வழங்கி இருப்பது தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
இந்தியா-ரஷ்யா உறவுகள் நீர்த்துப்போகவில்லை என்பதையும் மோடி, சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதில் ரஷ்யா தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. 2017ம் ஆண்டு முதல் 2022 வரை இந்தியாவுக்கான ஆயுத சப்ளையில் ரஷ்யா பாதியை பூர்த்தி செய்திருக்கிறது. சீனாவுடன் இந்தியாவுக்கு மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சீனாவுக்கு இந்த சந்திப்பு இனி இந்தியாவுடன் தேவையில்லாமல் வாலாட்ட வேண்டாம் முக்கிய மெசேஜை அனுப்பியுள்ளது”
நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் சந்திப்பில் இரு நாடுகளும் 2030ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரிப்பதற்கு ஒப்புக்கொண்டு பல துறையில் ஒத்துழைப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.8,40,000 கோடியாகும்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவு சமீபத்தில் ஆழமடைய தொடங்கியுள்ளது. தற்போது ரஷ்யா உடனான உறவும் மேம்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. வெளிநாடுகள் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் பலபேருக்கு மோடியின் ராஜதந்திர நடவடிக்கையில் எரிச்சலில் உள்ளார்கள்
இந்தியா – ரஷ்யா இடையே தற்போது மும்பை – மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இடையிலான
கடல்வழித்தடத்தில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடம் 8,675 கடல் மைல் அதாவது 16,000 கிலோ மீட்டர் தொலைவுடையது. இதன் வழியே பொருட்களை கொண்டு செல்ல சுமார் 40 நாட்களாகிறது. சென்னை – விளாடிவோஸ்டாக் கடல்வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கப்பல்கள் பயணிக்க வேண்டிய தூரம் சுமார் 5,400 கிலோ மீட்டர் அளவுக்கு குறையும். இதனால், பொருட்களை 24 நாள்களில் சேர்த்துவிடலாம்
சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளுடன் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மட்டுமின்றி, நிலத்தால் சூழப்பட்ட மங்கோலியாவுக்கு கூட சென்னையில் இருந்து சரக்குகளை அனுப்ப முடியும். இதனால், மும்பையைப் போல சென்னையும் வலுவான பொருளாதார மையமாக உருவெடுக்கும்.
தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வியன்னாவில் உள்ள அதிபர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. வந்தே மாதரம் இசைத்து அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அதிபர் மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதனை அடுத்து இந்தியா இந்த உலகத்திற்கு புத்தரை கொடுத்தது. யுத்தத்தை அல்ல என ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், இந்தியா எப்போதும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வியன்னாவில் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடன் சந்திப்பை நடத்திய பிரதமர் மோடி, தொழில் தொடங்குமாறும், கூட்டு முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.இந்திரா காந்திக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் அந்நாட்டிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















