தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ், நிஜாமலி, ஷர்புதீன், முகமது ரிஸ்வான், அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை அப்போது காவல்துறையினர் கைது செய்தனர். மதமாற்றம் தொடர்பான மோதலில் ஏற்பட்ட கொலை என்ற காரணத்தால் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரழுந்தூர் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் அதிகாலை முதல் சென்னையிலிருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















