சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்திற்கு ஒரு பதிவு தபால் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் பழனி பகுதியில் சிலர் பயங்கரவாத பயிற்சி எடுப்பதாகவும் எஸ்டிபிஐ சார்ந்த சையது அலி பாரூக் பிஎஃப்ஐ சார்ந்த பத்து பேருக்கு பயிற்சி கொடுத்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்த இருந்தது இதன் மூலம் உறுதியாக தெரிய வந்துள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் விசாரணையின் போக்கை மாற்றி, உண்மையை மறைக்க
முற்பட்டுள்ளனர் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டுகிறது. இந்த கடிதத்தில் வந்தது உண்மை இல்லை என்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் கடிதம் எழுதிய உள்ளதாக வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ளார்கள். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட நபர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை. இந்த சம்பவத்தை காவல் துறை மூடி மறைக்க முயற்சித்து இருப்பது துரதிருஷ்டவசமானது. இத்தகைய கொடூர பயங்கரவாதிகளை காவல்துறை அலட்சியமாக கையாள்வது பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் தைரியம் தருவதாகவும் அமைகிறது என்பதை முந்தைய கால பயங்கரவாதிகள் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
பாரதத்தில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாத செயல்களில் அதிகமான சம்பவங்கள் தமிழகத்தில் தான் நடந்துள்ளன. அதுமட்டுமல்ல பாரதத்தில் எங்கு இஸ்லாமிய பயங்கரவாத கொடூர செயல்கள் நடந்தாலும் அந்த சதியின் கைகள் தமிழகத்தில் உள்ளது என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இது எத்தகைய அவமானமானது என்பதை தமிழக காவல்துறை உணர வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது என்பதையும் தமிழக அரசு உணரவில்லை.
இந்துக்களின் பாதுகாவலராக விளங்கும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்கள் மீதான தாக்குதல் நடத்த சதி செயலை காவல்துறை மூடி மறைப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையின் மெத்தன போக்கால் இஸ்லாமிய பயங்கரவாதம் மேலும் வலிமை அடையும் என எச்சரிக்கிறோம். இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் கடிதம் எழுதி உள்ளோம். இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று சொன்னால் இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே எஸ்.டி.பி.ஐ. அமைப்பில் உள்ளவர்களின் பின்புலத்தை முழுமையாக உளவு துறை கண்காணிக்க வேண்டும். மற்றும் இவர்களுக்கு உதவி செய்பவர்கள் பற்றிய முழு விவரத்தை திரட்டி இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Source hindu Munnani