இந்தியா முழுவுதும் கொரானாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது இது அம மாநிலத்தியே புரட்டி போட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. ஆனால் மக்களோ கொரோனாவின் வீரியத்தை அறியாமல் சகஜமாக இருக்கின்றனர்.
கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் அங்கு பல்வேறு இடங்களுக்கு சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸால் கேரளாவில் மட்டும் கிட்டதட்ட 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ள நிலையில் துபாயிலிருந்து கேரளா திரும்பிய ஒருவரால் ஏற்பட்ட பிரச்சனையை எப்படி கையாள்வது என தெரியாமல் முழித்து வருகிறது.
கடந்த மார்ச் 11 ஆம் தேதி துபாயிலிருந்து கொரோனா வைரஸுடன் வந்த 47 வயதான அந்த நபர் சுமார் 7 நாட்கள் ஊர் சுற்றியுள்ளார். கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் எகலந்து கொண்டுள்ளார். இறுதியாக மசூதிக்கு சென்று தொழுகை செய்துள்ளார்.

பின் அவர் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார்.தனது பிள்ளைகளுடன் மைதானம் சென்றுள்ளார் அங்கு விளையாடியுள்ளார் . பின்னர் சொந்த ஊரில் உள்ள கிளப்களுக்கு சென்று வந்துள்ளார். அதன் பிறகே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7 நாட்களில் சுமார் 1400க்கும் மேற்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது சம்பவம் தற்போது கேரள அரசாங்கத்தை புரட்டியுள்ளது. அவர் எங்கு எங்கு என்றார் என்ன செய்தார் என்ற தகவல்களை சேகரிக்க கேரளா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது போன்று சமூதாய அக்கறை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும். உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது ஒரு தனி மனிதனின் அவசியமாகும். இனிமேல் பொதுமக்கள் தங்கள் உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
Courtesy : Kathir
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















