வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது. அக்கட்சியின் மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சியில் இம்மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தொழிலாளர்கள் 69 பேர் மரணம் அடைந்தனர். இது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது கடும் கண்டனங்களைத் தெரிவித்தன கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தொழிலாளர்கள் 69 பேர் மரணம் அடைந்தனர். இது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.
கூட்டணிக் கட்சியாக இருக்கும் விசிக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவை கண்டித்தும், தேசிய அளவில் மதுவிலக்கு கோரியும் ஆர்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்பாட்டத்தில்தான் விசிக மகளிரணி சார்பில் மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார் திருமாவளவன்.
விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நடத்தும் முதல் மாநாடு என்பதால் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் திருமா முனைப்பு காட்டி வருகிறார். மண்டல வாரியாக தமிழகம் முழுதும் பயணம் செய்து மாநாட்டுக்கான கூட்டம், நிதி திரட்டுதல் உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகிகளோடு ஆலோசிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘மது ஒழிப்பு என்பதில் திமுகவும் உடன்படுகிறது, அதிமுகவும் உடன்படுகிறது, இடது சாரிகளும் உடன்படுகிறார்கள். எனவே இந்த மாநாட்டில் கட்சி கடந்து அனைவரும் பங்கேற்கலாம். அதிமுகவும் கூட பங்கேற்கலாம். சாதிய, மதவாத சக்திகளை தவிர அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கலாம்’ என்று அறிவித்தார் திருமா.
இதுதான் தமிழக அரசியல் அரங்கில் விவாதப் பொருளானது. திருமா அறிவித்தது பற்றி சிவகங்கையில் இருந்த அமைச்சர் உதயநிதி, ‘அதிமுகவை திருமா அழைப்பது அவரது விருப்பம். எனவும் அமைச்சர் மா.சு, ‘திமுக கூட்டணியில் ஒரு பிசிறு கூட இல்லாமல் முதல்வர் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்’ எனவும் இன்னொரு பக்கம் அமைச்சர் ரகுபதி, ‘திருமாவும் முதல்வரும் நெருங்கிய நண்பர்கள். எங்கள் கூட்டணியை விட்டு அவர் எங்கேயும் போக மாட்டார்’ என கூறினார்கள்.
இப்படி திமுக அமைச்சர்கள் ரியாக்ட் செய்துகொண்டிருந்த நிலையில் விசிக வட்டாரத்தில் விசாரித்தபோது,
‘விசிக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று எம்பி தொகுதிகள் கேட்டது, அதில் ஒரு பொதுத் தொகுதி கேட்டது. ஆனால் திமுகவோ 2019 இல் போட்டியிட்ட 2 தொகுதிகள்தான் என்பதில் உறுதியாக இருந்தது. அதனால் கூட்டணி ஒப்பந்தம் தாமதமாகத்தான் கையெழுத்தானது. எனினும் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தங்களது சொந்த சின்னமான பானை சின்னத்தில் விடாப்பிடியாக நின்று வென்றது விசிக.
இதேபோன்ற குறைவான இடங்களில் போட்டியிடும் நிலைமை 2026 சட்டமன்றத் தேர்தலில் வரக் கூடாது என்று கருதுகிறார் திருமா. வரும் சட்டமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சியான விசிகவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
அதேநேரம் திமுகவோ கூட்டணிக் கட்சிகளிடம் ஓரளவுக்குத்தான் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும், அவர்கள் அளவுக்கு மீறி நெருக்கடி கொடுத்தால் வருகிறவர்கள் வரட்டும், போகிறவர்கள் போகட்டும் என்ற ஆலோசனையில் இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் தேர்தலுக்கு 20 மாதங்களுக்கு முன்பே சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு அமைத்து தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகிறது. இதை அறிந்த திருமாவளவன் தங்களது பேர சக்தியை அதிகமாக்க வேண்டும் என்றுதான் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அறிவித்துள்ளார்.
அப்போது, ‘திருமாவளவன் நமது கூட்டணிக்குள் இருந்துகொண்டே தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பும் வகையில்தான் பேசி வருகிறார். முதல்வர் வெளிநாட்டில் இருக்கும் நேரமாக பார்த்து இப்போது இப்படிப் பேசியிருக்கிறார். ஒருவேளை கள்ளக்குறிச்சியில் அவர்கள் நடத்தும் மாநாட்டில் அதிமுக பங்கேற்பது உறுதியானால்… திமுக சார்பில் அதில் யாரும் பங்கேற்கக் கூடாது என்று நாம் தலைவரிடம் சொல்லுவோம். அதுதான் திமுகவின் இமேஜை காட்டுவதாக இருக்கும். திருமா இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நாம் செல்லக் கூடாது என திமுகவினர் கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசு மீது திருமாவளவன் திடீர் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக அரசை விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவுக்கு பழக்கி, மக்களை குடிநோயாளிகள் ஆக்கிவிட்டு, எவ்வளவு உயர்ந்த நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும் அதில் பயனில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அரசுக்கு அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மதுஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு விசிக அழைப்பு விடுத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.