காங்கிரஸ் காரர்களுக்கு காங்கிரஸ் முதல்வரின் மகன் – காங்கிரஸ் ரத்தம் – கொகோய் போன்றவர்கள் பதில் கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்பதற்கு இவரது பேட்டிகள் எடுத்துக் காட்டு. இவரை ராஜ்யசபாவுக்கு நியமித்தது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால், இவரை தவிர காங்கிரஸ் லாபியை எவரும் பந்தாட இயலாது. இவர் இன்னும் பேசினால் லாபி துர்நாற்றம் வெளியே வர தொடங்கும். டாக்டர் ஜெய்ஷங்கர் அரசின் வெளியுறவு துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அவரது திறமைக்காக அவரையும் ராஜ்யசபா உறுப்பினராக்கி இன்று வெளியுறவுத் துறையில் சிறப்பாக பணியாற்றுகிறார். இவரை போல பல திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது மோதி அரசு. அதில் புதிய இணைப்பு: கொகோய். காவல்துறை சீர்திருத்தம், சட்ட சீர்திருத்தம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என பல விவகாரங்களிலும் இவரது பங்கு பலத்தை தரும் என்று பிரதமர் மோதி நினைத்திருக்க வாய்ப்பு உண்டு.
ராஜ்யசபா பொறுப்பேற்ற பின், இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி , டைம்ஸ் ஆஃப் இந்தியா என பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்த ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் நேற்று டைம்ஸ் நௌ நாவிக்கா குமாருக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் :
தொகுப்பாளர் நாவிக்கா குமார் கேள்வி: காட்ஜு, ஏ பி ஷா, மதன் லோகூர், குரியன் ஜோசப் போன்ற முன்னாள் நீதிபதிகள், ‘அரசுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கி, அதன் மூலம் ராஜ்யசபா உறுப்பினர் பொறுப்பை பெற்றதால் நீங்கள் நீதித்துறையின் பெருமையை குறைத்து விட்டீர்கள்’ என்று குற்றம் சாட்டுவது குறித்து
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்: ஜஸ்டிஸ் காட்ஜு இதற்கு சம்பந்தமே இல்லாதவர். அறிவில்லாதவர் என் நண்பர்களாக இருந்த மதன் லோக்கூருக்கும் குரியன் ஜோசப்புக்கும் சொந்த பிரச்சினைகள் உள்ளன . அவர்களுக்கு லட்சியங்களில் தோல்வி. நிதித்துறை சுதந்திரத்தின் வெற்றிவீரர் ஏ பி ஷாவை பொறுத்தவரை… அவர் விவகாரங்கள் எல்லாம் பதியப்பட்டுள்ளன.
அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவரது பெயர் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்படவில்லை. ஒரு குற்றச்சாட்டு திரையுலக நட்சத்திரம் சம்பந்தப்பட்டதுமற்ற இரு குற்றச்சாட்டுகளும் சொத்து விவகாரங்கள்.
ஒரு விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது 2008இல். அந்த வழக்கு எண்ணை போட்டு தகவலறியும் சட்டத்தின் படி விவரத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நாவிக்கா குமார். நூற்றுக்கணக்கான கோடி பெருமானமுள்ள சொத்துக்கள் ஏலத்தில் சொற்ப மதிப்பில் விற்கப்பட்டன . இப்படிப்பட்ட ஏ பி ஷா, மதன் லோக்கூருடனும் குரியன் ஜோசப்புடனும் சேர்ந்து நீதிமன்ற சுதந்திரம் பற்றி எப்படி பேசுகிறார்?
டைம்ஸ் நௌ நாவிக்கா குமார் கேள்வி: கபில் சிபல், ‘கொகோய் ராஜ்யசபா பொறுப்பை ஏற்றது நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை குறைக்கும் செயல்’ என்று கூறியிருப்பது பற்றி…
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்: கபில் சிபலை தனிப்பட்ட முறையில் விமரிசிக்க விரும்பவில்லை. அவர் என்னை குறி வைக்க ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி காரணமாக இருக்கலாம். 2018இல் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு எதிராக ஊடகங்களை நாங்கள் (நால்வர்) சந்தித்தபின், என் இல்லத்துக்கு வந்தார் கபில் சிபல். தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவை தகுதி நீக்கம் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதரவை கேட்டார். அவரை வீட்டுக்குள் நான் அனுமதிக்கவில்லை.
டைம்ஸ் நௌ நாவிக்கா குமார் கேள்வி: இதுவரை அறிந்திராத விஷயம் இது. இதை கபில் சிபல் உங்களிடம் கேட்டாரா?
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்: நான் அவரை வீட்டுக்குள் விடாததால் என்னிடம் நேரடியாக சொல்லவில்லை. ‘தீபக் மிஷ்ரா தகுதி நீக்கத்துக்கு ஆதரவு கேட்டு அவர் என்னை சந்திக்க வருவார்’ என்று எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை தொலைபேசியில் அழைத்தவரிடம், ‘அவரை இங்கே வர வேண்டாமென்று சொல்லிவிடுங்கள்’ என்று கூறிவிட்டேன்.
கபில் சிபல் பற்றி: ராம் மந்திர் வழக்கு, ஆதார் வழக்கு என பல வழக்குகளிலும் ஆஜரான இந்த காங்கிரஸ் குண்டரும், இந்த லாபியை சேர்ந்த இந்திரா ஜெய்சிங், பூஷன், தவன் போன்றவர்கள் நீதிமன்றத்தில் உரக்க பேசுவதும் மிரட்டுவது பற்றி ஊடகங்கள் பகிர்ந்துள்ளன.
ராம் மந்திர் வழக்கில் தீர்ப்பு வராத வகையில் முந்தைய தலைமை நீதிபதிகளை மிரட்டியதும் உண்டு. வழக்கறிஞர் நேரில் ஆஜராகாமல் தொலைபேசி மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு (பெயில் வாங்கிய கதை எல்லாம் சந்தி சிரிக்கும் அவலம். இந்த லாபி அவ்வளவு பவர்ஃபுல். ராம் மந்திர் விவகாரத்தில் தீபக் மிஷ்ரா தீவிரமாக இருந்ததால் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வர மனு சமர்ப்பித்தனர் சிபல் உள்ளிட்ட காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்டுகள் அதை நிராகரித்தார் வெங்கையா நாயுடு.
என்றாலும், ராம் மந்திர் வழக்கை முடிக்காமலேயே ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் தீபக் மிஷ்ரா. இந்த லாபிக்கு பயப்படாமல் எதிர்த்து நின்றதால் கொகோய் மீது காட்டம். என்றாலும், காங்கிரஸ் ரத்தம் பாயும் கொகோய் இவர்கள் மிரட்டலுக்கு பணிபவராக தெரியவில்லை.
இவரை ராஜ்யசபாவுக்கு நியமித்தது பல விதங்களில் நன்மை தரும் செயல்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















