தமிழக பா.ஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர்,பாஜக மூத்ததலைவர் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில், 850 போலீசார் போதை கடத்தலுக்கு துணை போனதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போலீஸ் துறை கடமை தவறியுள்ளது.
மகனுக்கு மகுடம் சூட்டுவதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவாவது போலீஸ் துறையில் கவனம் செலுத்த வேண்டும்.முதல்வர் மட்டுமல்ல; அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ், பொன்முடி தங்கள் இலாகா வேலைகளை பார்க்காமல் மற்ற வேலைகளை செய்து வருகின்றனர்.
இது, கல்வி அமைச்சர் மகேஷின் சொந்த மாவட்டமான திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியரின் மகன், 45 குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியவரை பிடிக்க, 200 போலீசார் செல்கின்றனர்; அவர் என்ன பயங்கரவாதியா?
தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. 1,300 அரசுப் பள்ளிகள் மூட வேண்டிய நிலையில் உள்ளன. அமைச்சர்கள் தங்கள் துறைகளில் கவனம் செலுத்துவதில்லை. முதல்வரின் கீழ் உள்ள போலீஸ் துறையில் தன் கடமையை செய்ய தவறி விட்டதால் ஆட்சியை ஆள வேண்டும், இல்லை என்றால் வெளியேற வேண்டும். இவ்வாறு பாஜக மூத்ததலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















