பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை ஒதுக்கிய வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
சுமார் 471 நாட்கள் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பலமுறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. மேலும், வெளிவந்த மூன்றே நாளில் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார். செந்தில் பாலாஜியை தியாகி லெவெலில் கொண்டாடி மகிழ்ந்தார்கள் திமுகவினர். செந்தில் பாலாஜியால் உதயநிதி பெயர் மறந்து போனது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு திமுகவினர் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க தனியாக அமர்வு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற அடிப்படையில்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இப்போது, அவர் மீண்டும் அமைச்சராகியிருப்பதால் ஜாமீனைப் பரிசீலிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். அதற்கு, மறுபரிசீலனைக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
அந்த உத்தரவில், “எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான 29 வழக்குகளைத் தற்போதைய அமர்வு நீதிபதி கையாள்கிறார். இதில், 20 வழக்குகள் விசாரணை நிலையில் இருக்கின்றன. சில வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. மொத்தமாக 2,000-க்கும் மேற்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களும், 600 அரசு தரப்பு சாட்சிகளும் இருக்கின்றன. குற்றப்பத்திரிகையிலுள்ள குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது, இந்த வழக்குகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும்.
எனவே, சிறப்பு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு அமர்வு நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமிப்பது பொருத்தமானதாக இருக்கும். குறிப்பாக, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் தற்போதைய அமர்வு நீதிபதி பணிச்சுமை காரணமாக, செந்தில் பாலாஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையை விசாரிக்க மற்றொரு அமர்வு நீதிபதியை நியமிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது செந்தில்பாலாஜி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் வழக்கை முடிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுவருகிறது. மேலும் அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி அக்டோபர் 4ம் தேதி ஆஜராக சென்னை முதன்மை அமர்வு கோர்ட் உத்தரவு.விசாரணையை அக்டாபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற செந்தில்பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு.