திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளியில் படித்து வருகிறார். அச்சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலுருந்து ஆடுகளை அழைத்துக்கொண்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது வயலில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த பவன்குமார், அவரது அண்ணன் ராமஜெயம், செல்வராஜ் ஆகிய மூவரும் அந்த சிறுமி தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதை சாதகமாக்கி, அச்சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தியுள்ளனர். தனக்கு நடந்த சமபவத்தை தனது பெற்றோரிடம் அச்சிறுமி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், மூன்று பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து வேளூர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து காட்டுப்பகுதிக்கு சென்றுள்ள நிலையில், இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது குறிப்பிடத்தக்கது.
சங்கராபுரம் அருகே 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சபரி என்கின்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
பள்ளி படிக்கின்ற சிறுமிகள் கூட சாலையில் தனியாக நடந்து செல்ல முடியாத அவலநிலைக்கு நமது தமிழகம் தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. சிறுமிகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை தடுப்பதற்கு கடுமையான சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















