சீனாவில் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’ இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் முழு மூச்சுடன் போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கொரோன குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் செய்தியாளர்களிடம் பேசியபோது : கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள நாடுகளில் இந்த வைரஸ் எதிர்வரும் நாட்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாக இருக்கிறது.

ஆனால், உலகளாவிய தொற்றுகளான சின்னம்மை மற்றும் போலியோவை இந்தியா ஒழித்தது போல, கொரோனாவை எதிர்கொள்வது பற்றியும் உலகிற்கு வழிநடத்த வேண்டும். தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா மிகப்பெரிய ஆற்றலை கொண்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் முன்பு எதிர்கொண்டதை போல உலகிற்கே வழிகாட்டியாக இருப்பது முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















