பிக் பாஸ் வாயிலாக பிரபலமான இசைவாணி என்பவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் அவர் பாடிய பாடல் ஒன்று இந்து மதத்தில் முக்கிய கடவுளாக கருதப்படும் ஐயப்பசாமி குறித்து பாடிய பாடல் பக்தர்களை புண்படுத்தும் வகையாக அமைந்திருந்தது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது தமிழக அரசு இதுவரை எந்த ஒரு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என இந்து மக்களிடையே கோபம் எழந்துள்ளது.இந்த விசயத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக உள்ள சேகர்பாபுவின்உண்மை முகம் வெளிவந்துள்ளது என இந்து முன்னணி சார்பில் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
இந்து விரோத போக்கை புரிய வைத்திருக்கிறது. தவறு இருந்தால் சட்டம் பாயும் என்று சொல்லும் அமைச்சரே இந்துக்கள் யாராவது சமூக வலைதளத்தில் இந்து மத ஆதரவு கருத்துக்களையோ, அரசின் தவறுகளையோ, சுட்டிக்காட்டும் கருத்துக்களை பகிர்ந்தாலே உடனடியாக தனிப்படை அமைத்து வேலை செய்து விடும்.
ஆனால் பல லட்சம் பேர் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை காண செல்லும் இந்த மாதங்களில், இது போன்று ஐயப்ப பக்தர்கள் மனது புண்படும் வகையில் பாடியுள்ள இசைவாணி மீது வழக்கு பதிந்து கைது செய்யாது இருக்கும்.
ஐயப்ப பக்தர்கள் இந்த அரசின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கந்த சஷ்டி கவசம். சிதம்பரம் நடராஜ பெருமான் வரிசையில் ஐயப்பனையும் போலி நாத்திகக் கூட்டம் விட்டு வைக்கவில்லை.
இந்துமதத்தை இழிவு செய்பவர்களை இந்த அரசு கண்டுகொள்ளாது.நாம்தான் நமது எதிர்ப்புகளின் மூலம் இந்த அரசிற்கு புரிய வைக்க வேண்டும என ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.