தற்போது இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் என்றால் அண்ணல் அம்பேத்கர் அமித்ஷா தான். நாடளுமன்ற விவாதத்தின் போது அமித்ஷா காங்கிரஸ் அண்ணல் அம்பேத்கரை எப்படி நடத்தியது என குற்றசாட்டுகளை அடுக்கினார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அமித் ஷா அம்பேத்காரை அவமானப்படுத்திவிட்டதாக கூச்சலிட்டு நாடாளுமன்ற அவைகளை ஒத்தி வைத்தார்கள்
இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டது மஇதனை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போராட களமிறங்கினார்கள் பாஜகவினர் . இந்த போராட்டத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது பாஜக எம்பிக்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்த துரோகங்களை பட்டியிலட தொடங்கியது பாஜக. பிரதமர் மோடி அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை மறுத்தது காங்கிரஸ் கட்சிதான். அம்பேத்கருக்கு எதிராக பிரசாரம் செய்தவர் நேரு. அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்க ஒரு வம்சத்தின் கட்சி முழுமையாக ஈடுபட்டது. அம்பேத்கரை, இரண்டு முறை காங்கிரஸ் கட்சிதான் தேர்தலில் தோல்வியடையச் செய்தது என்று காங்கிரஸ் அவமதிப்பு என்று ஒரு பட்டியலையே மோடி வெளியிட்டிருக்கிறார்
இதனை தொடர்ந்து ஓவராக பேசிய திமுகவையும் விட்டுவைக்கவில்லைபாஜக. குறிப்பாக அரசியலமைப்பு சட்ட அரசியலமைப்பு ஒழுக்கத்தை பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கும் திமுக-வின் வழிகாட்டியான பெரியார், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அம்பேத்கரால் உருவான அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். நங்கள் சட்ட புத்தகத்தை கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்தார். இதை சுட்டி காட்டி திமுகவை காலி செய்தார் தேஜஸ்வி
இன்னொரு பக்கம் அண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவை வச்சு செய்தார். கடந்த 2012ஆம் ஆண்டு, அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்ததற்காக, காங்கிரஸையும், திமுகவையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் அவரே போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டார். மேலும் காங்கிரஸும், திமுகவும் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும், பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்குச் செய்த அவமரியாதையையும், பட்டியல் சமூக மக்களுக்கு அவர்கள் செய்த களங்கங்களின் வரலாற்றையும் அழிக்க முடியாது என கூறினார்.
இந்த சூழலில் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் கோபம் கொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களை சாட்டையால் அடிப்பது போலவும் 1950 ஆம் ஆண்டு கேலிச்சித்திரம் வரைந்த கேசவ் சங்கர் பிள்ளை என்பவர் Children’s Book Trust என்கிற புத்தகத்தில் அச்சித்திரத்தை அச்சிட்டு வெளியிட்டார்.
அண்ணலை அவமதித்த கேசவ் சங்கர் பிள்ளைக்கு காங்கிரஸ் அரசு 1956 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1966 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 1976 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கெளரவித்தது. அதுமட்டுமல்ல மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது 2012 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்அந்த கேலிச்சித்திரத்தை NCERT பாடத்திட்டத்தில் சேர்த்தது. அந்த கூட்டணி ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கதுஎன ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார் ஒட்டு மொத பாஜகவினரும் காங்கிரசையும் திமுகவையும் ஆதரங்களோடு கதறவிட்டு வருகிறார்கள்.