Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு ரூ .1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்

Oredesam by Oredesam
December 21, 2024
in செய்திகள்
0
பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு ரூ .1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்பு படைகளில் சேவைபுரிந்து பணிநிறைவு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்காக வேலூரில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்

ஸ்பார்ஷ் எனப்படும் திட்டத்தின் கீழ் முப்படை (ராணுவம்,கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காணவும், அவர்களின் பல்வேறு ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும் ஒரு மாபெரும் முகாம் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல சங்கம் இணைந்து வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் 21.12.2024 அன்று நடத்தப்பட்டது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, பாதுகாப்பு கணக்குகள் துறை சிறப்புத்தலைவர் டாக்டர் மயாங்க் ஷர்மா, தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், இந்திய கடலோர காவல் படை துணை தலைமை இயக்குநர் டி.தினகரன் ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களை சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் திரு டி ஜெயசீலன் வரவேற்றார்.

ஸ்பார்ஷ் திட்டத்தில் உள்ள பல்வேறு சேவைகளை பற்றியும் அவற்றினால் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் விரிவாக சிறப்பு பாதுகாப்பு கணக்குகள் துறை தலைவர் டாக்டர் மயாங்க் ஷர்மா விளக்கினார்.

முன்னாள் படை வீரர்களுக்கு அரசின் பல்வேறு உதவி திட்டங்களை பற்றியும் வேலை வாய்ப்புகளை பற்றியும் தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் பேசினார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் முக்கிய பங்கை நினைவு கூர்ந்த ஆளுநர் திரு. ஆர் என் ரவி, வேலூர் மாவட்டம் வீர பூமி என்று கூறினார். மேலும் நாட்டின் வளர்ச்சியிலும் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் பாதுகாப்பு படைகளின் முக்கிய பங்கை அவர் விவரித்தார்.

சுமார் 2100-க்கும் மேற்பட்ட முப்படை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். ஓய்வூதியதாரர்களின் குறைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதிய நிலுவைத் தொகையாக சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவின் சிறப்பு அம்சமாக, தாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.

வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காணுதல், ஆதார் புதுப்பித்தல், ஒரே ரேங்க் ஒரே பென்ஷன் (OROP) போன்றவை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் தீர்த்தல்,ஸ்பார்ஷ் திட்ட விளக்கம் மற்றும் குறை தீர்ப்பு என பல்வேறு சேவைகளுக்கென்று குழுக்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஜமாத்- இ- இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடைய  வீடுகள் அலுவலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

ஜமாத்- இ- இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடைய வீடுகள் அலுவலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

August 9, 2021
ChenabBridge

இந்தியாவின் பொறியியல் அதிசயம்! ஈபிள் டவரை விஞ்சும் பிரமாண்டம்! உலக அதிசயமே அசந்துபோகும் அதிசயம்! திறந்து வைத்த மோடி!

June 7, 2025
ஒன்றுக்கும் உதவாத, யாருக்கும் பயனளிக்காத நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது-நாராயணன் திருப்பதி.

ஒன்றுக்கும் உதவாத, யாருக்கும் பயனளிக்காத நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது-நாராயணன் திருப்பதி.

March 19, 2022

நரேந்திரமோதி‍ தற்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நெருக்கடியை சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

April 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x