சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்தநிலையில், கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் மணி, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல்… செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத்துறையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை மேலாண் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்திற்கு தொடர்புடைய அக்கார்ட் டிஸ்லரிஸ் அண்ட் பிவெரெஜஸ் பிரைவெட் லிமிடெட், எஸ்.என்.ஜே குழுமம், கால்ஸ் குழுமம் ஆகிய மதுபான ஆலைகளின் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் எண்ணிக்கைக்கும், டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது தொடர்பான பணப்பரிவர்தனைகள் சட்டவிரோதமாக செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனையை அமலாக்கத்துறை செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே உச்சநீதிமன்றமும் தனது கவலைகளை கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்து இருந்தது. “நாங்கள் ஜாமீன் வழங்குகிறோம், மறுநாள் நீங்கள் சென்று அமைச்சராகிறீர்கள். அமைச்சரவையில் மூத்த அமைச்சராக உங்கள் பதவியில் இருப்பதால் சாட்சிகள் அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற எண்ணத்தில் யாராவது இருப்பார்கள். இதில் என்ன நடக்கிறது?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இருப்பினும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய செப்டம்பர் உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது. இந்த நிலையில் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் டாஸ்மாக்கில் கமிஷனில் ஒரு பங்கு கோபாலபுரத்துக்கும் செல்வதாக தகவல் ஆல்ரெடி கசிந்து வந்தது. மின்சாரத்துறை தமிழக மின்வாரியத்திற்கு, 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய, ‘டெண்டர்’ விட்டதில், 397 கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீது, புகார் எழுந்தது. செந்தில் பாலாஜியை தட்டினால் கோபாலபுரத்தின் உள்ளே செல்ல வழி கிடைக்கும் என அமலாக்கத்துறை முடிவு செய்துதான் டாஸ்மாக், மற்றும் மின்சார கொள்முதல் தொடர்பாக களத்தில் இறங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சென்னை மண்ணடியில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் காலை தீடீரென் சோதனையில் ஈடுபட்டனர்.இதற்கும் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் சோதனை நடத்தியதற்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் நகர்ந்துள்ளது இந்த சோதனை. இந்த சோதனை திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது,கோபாலபுரம் வரை அமலாக்கத்துறை பாய தயாராகிவிட்டது இனி ஆண்டவன் விட்ட வழி என முதல்வரின் ஐபி ரிப்போர்ட் கூறிவிட்டதாம். இதனிடையே டெல்லி க்கு விரைகிறதாம் அறிவாலயத்தின் முக்கிய தலைகள்.. அமித்ஷா வந்து சென்ற நிலையில் அதிரடியில் இறங்கியுள்ளது அமலாக்கத்துறை மேலும் பலசம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கோவையில் பாஜக கட்சி அலுவலக திறப்பு விழாவில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசிய போது, அவரது பேச்சிலேயே அமலாக்கத் துறை ஆபரேஷனுக்கான அறிகுறிகள் தென்பட்டன. திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
’தமிழ்நாட்டில், சட்டவிரோத மதுபானம் குறித்து புகார்கள் வரும்போது, அதை தயாரிப்பதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள்’ என்று சட்ட விரோத மது வணிகம் தமிழ்நாட்டில் நடப்பதாக தனது பேச்சில் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ED search Minister Senthilbalaji
அதுமட்டுமல்ல… திமுகவில் ஒருவர் வேலைக்காக பணம் பெற்ற ஊழலில் ஈடுபட்டுள்ளார், மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத செம்மண் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார், மூன்றாவது ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கில் சிக்கியுள்ளார், நான்காவது ஒருவர் நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர், ஐந்தாவது தலைவர் 6,000 கோடி CRIDP திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் திமுக அமைச்சர்களின் பெயரைக் குறிப்பிடாமல் ஹிட் லிஸ்ட் போலவே மேடையில் வெளியிட்டார் அமித் ஷா.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















